அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

டுகாட்டி நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் வாகனமான, சியூஎக்ஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு, மிகவும் அழகான மற்றும் பவர்புல் பைக்குகளைத் தயாரித்து வரும் டுகாட்டி நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 2.06 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

தற்போது டுகாட்டி நிறுவனம் மூலம் அறிமுகமாகியிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஏற்கனவே சூப்பர் சோகோ நிறுவனத்தின் மூலம் சியுஎக்ஸ் என்ற பெயரில் விற்பனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அண்மையில் இரு நிறுவனங்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த எலக்டரிக் ஸ்கூட்டர் தற்போது டுகாட்டியின் கிராஃபிக்ஸ் ஒட்டப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

இதைத்தவிர்த்து சியுஎக்ஸ் ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் பெரிதாக செய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால், சிறப்பாக டுகாட்டி நிறுவனத்தின் சிறப்பான தீம் மட்டும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், வெள்ளை மற்றும் சிவப்பு லிவரி வண்ணத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

யுனைடெட் கிங்டம் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த சூப்பர் சோகோ நிறுவனம், சியுஎக்ஸ் மட்டுமின்றி பல்வேறு, மின்சாரம் சார்ந்து இயங்கும் வாகனங்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூப்பர் சோகோ சியுஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத்தான், டுகாட்டி நிறுவனம் அண்மையில் நடைபெற்ற மோட்டோ ஜிபி டீமில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுவே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

இந்த சியுஎக்ஸ் டுகாட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தேவையான சக்தியை 30Ah லித்தியம் பேட்டரி வழங்குகின்றது. இத்துடன் போஸ்ச் நிறுவனத்தின் எலக்ட்ரிக் மோட்டர் இணைக்கப்பட்டுள்ளது. இது, 2,700 வாட் திறனை வெளிப்படுத்தும். 3.6 ஹேச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த அதீத சக்தியால் இந்த ஸ்கூட்டர் பெர்ஃபார்மென்ஸிற்கு ஈடான திறனைப் பெற்றிருக்கின்றது.

MOST READ: இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

இது அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும். அதேசமயம் இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 75 கிமீ செல்லும். மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரமே போதுமானதாக இருக்கின்றது. இவற்றுடன் பாதுகாப்பு வசதிகளாக, இபிஎஸ் வசதியுடன் கூடிய 180 எம்எம் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

MOST READ: சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...!

அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

டுகாட்டி நிறுவனத்தின் மூலம் வெளிவரும் இந்த முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மாடர்ன் லுக் ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் விளக்குகள் 75 மீட்டர் தூரம் வரை வெளிச்சத்தை பரப்பும்.

MOST READ: இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த எம்ஜி ஹெக்டார் கார் புக்கிங் விபரம்!

அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

இதைத்தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரின் முன் பகுதியில், இரவு நேரத்தில் கூட படம் பிடிக்கின்ற வகையிலான கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காட்சிகள் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரில் கிடைக்கும். இது, முழுக்க முழுக்க டிஜிட்டல் மயத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் குறித்த அனைத்து தகவலையும் வழங்கும்.

அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்!

இதேபோன்று, பிரத்யேகமாக ஜி-போர்ஸ் சென்சார் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆட்டோமேட்டிக்காக ஸ்மார்ட்போனில், ஸ்கூட்டர் குறித்த டேட்டாக்களை வழங்கும். இத்துடன், ஸ்மார்ட்போன் ஆப் மூலம் ஸ்கூட்டரில் உள்ள சிலவற்றை கன்ட்ரோல் செய்ய முடியும். இந்த சிறப்பான ஸ்கூட்டரின் இந்திய வருகை குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், வரும் காலங்களில் இதன் வெளியீடு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Unveils first Electric Scooter CUx. Read In Tamil.
Story first published: Wednesday, May 22, 2019, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X