30 நிமிடம் சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணம்: உலகின் முதல் சூப்பர் சைக்கிள் - இதன் விலை தெரியுமா...?

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முன்னாள் இஞ்ஜினியர், தனியாக இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், அவர் தற்போது தயாரித்துள்ள எலெக்ட்ரிக் பை-சைக்கிளானது 200 கிமீ மைலேஜ் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

30 நிமிடம் சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கலாம்: உலகின் முதல் சூப்பர் சைக்கிளை உருவாக்கிய பிரபல பைக் நிறுவனத்தின் முன்னாள் இஞ்ஜினியர்!

அமெரிக்காவைச் சார்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கிளாசிக் ரக பைக் தயாரிப்பில் முதன்மை வகித்து வருகின்றது. இந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து ரக பைக்கிற்கும், உலக நாடுகள் முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த பைக்கின் பாரம்பரிய லுக், பிக்அப் திறன் கவர்ச்சிகர தோற்றம் ஆகியவையே இதன் மீது பலர் தீராத மோகம் வைக்க காரணமாக உள்ளது.

இந்த பைக் விற்பனையை ஆரம்பித்த அன்றிலிருந்து தற்போது வரை இந்த பைக்கிற்கு போட்டியாக பல இருசக்கர வாகனங்கள் சந்தையில் களம் இறக்கப்பட்டன. ஆனால், களமிறங்கிய சில நாட்களிலேயே போட்டிக்கொடுக்க முடியாமல் திணறி ஓரங்கட்டப்பட்டன. இவ்வாறு ஹார்லி டேவிட்சன் சென்ற இடமெல்லாம் புகழையேப் பெற்றுவருகிறது.

30 நிமிடம் சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கலாம்: உலகின் முதல் சூப்பர் சைக்கிளை உருவாக்கிய பிரபல பைக் நிறுவனத்தின் முன்னாள் இஞ்ஜினியர்!

இத்தகைய சிறப்புடைய மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் பொறியாளராக எரிக் புவல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில வருடங்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்று தனியாக இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் மூலம் தற்போது இரண்டு புதிய மாடல் மின்வாகனங்களை அவர் தயாரித்துள்ளார். மேலும், இதற்காக பிரெட்ரிக் வேஸ்ஸியூர் மற்றும் பிரான்காய்ஸ் சேவியர் ஆகியோருடன் இணைந்து பியூவல் (Fuel) என்னும் புதிய பிராண்ட் மின்வாகனங்களை அறிமுகம் செய்துள்ளார்.

அதில் ஒன்று மின் மோட்டார்சைக்கிளாகவும், மற்றொன்று மின் பை-சைக்கிளாகும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு வாகனங்களையும் வருகின்ற ஏப்ரல் மாதம் 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக எரிக் புவல் அறிவித்துள்ளார்.

30 நிமிடம் சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கலாம்: உலகின் முதல் சூப்பர் சைக்கிளை உருவாக்கிய பிரபல பைக் நிறுவனத்தின் முன்னாள் இஞ்ஜினியர்!

இதில், மின்மோட்டார் சைக்கிளுக்கு ஃப்ளோ (Flow) என்றும் மின் பை-சைக்கிளுக்கு ஃப்ளூயிட் (Fluid) என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ஃப்ளோவில் மின் மோட்டார்சைக்கிளானது ஃப்ளோ1 மற்றும் ஃப்ளோ-1s ஆகிய வெர்ஷனில் கிடைக்கின்றது. அதில், ஃப்ளோ-1 11kW திறன் கொண்டதாகவும், ஃப்ளோ-1s 35kW திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வெர்ஷனும் வாகன ஓட்டிக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் முன் பக்கத்தில் இரட்டை அடுக்குகள் கொண்ட புரஜெக்டர் மின் விளக்கு, ஒரு சிறிய விண்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் எஞ்ஜினானது நேரடியாக பின்சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பெல்ட் அல்லது சங்கிலியின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விதமாக இதுபோன்று நேரடியாக பின் சக்கரத்துடன் மோட்டார் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

30 நிமிடம் சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கலாம்: உலகின் முதல் சூப்பர் சைக்கிளை உருவாக்கிய பிரபல பைக் நிறுவனத்தின் முன்னாள் இஞ்ஜினியர்!

மேலும், இந்த பைக்கிலும் மற்ற எலக்ட்ரிக் பைக்கில் இருப்பதைப் போன்றே பாதுகாப்பு அம்சங்களான டிபிஎஃப்டி ஸ்கிரீன், கனெக்டிவிட்டி ஃபன்க்ஷன்ஸ் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த இரண்டு மாடல் பைக்குகளும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 125 மைல் செல்லும். அதாவது, 200 கிமீ தூரம் செல்லும்.

இதேபோன்று, ஃப்ளூயிட் பை-சைக்கிளானது பேட்டரியால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பை-சைக்கிளில் கழற்றி, மாட்டிக்கொள்ளும் வகையில் (Removable) இரண்டு 980Wh லித்தியம் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பை-சைக்கிளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை செல்லலாம்.

இந்த மின் பை-சைக்கிளும் ஃப்ளூயிட்-1 மற்றும் ஃப்ளூயிட்-1s என இரண்டு வேரியண்ட்களில் களமிறங்க உள்ளன. அதில், ஃப்ளூயிட்-1 அதிகபட்சமாக 32 கிமீ வேகம் செல்லும். இதில், 250 வாட் கொண்ட மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. ஃப்ளூயிட்-1s இல் 500 வாட் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் செல்லும்.

30 நிமிடம் சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கலாம்: உலகின் முதல் சூப்பர் சைக்கிளை உருவாக்கிய பிரபல பைக் நிறுவனத்தின் முன்னாள் இஞ்ஜினியர்!

ஃப்ளோ மின் மோட்டார் சைக்கிளின் விலையானது இந்திய மதிப்பில் ரூ. 7.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஃப்ளூயிட் பை-சைக்கிளின் விலையானது ரூ. 2.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனங்களுக்கான புக்கிங்கை வருகின்ற ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இருந்து அமெரிக்காவில் தொடங்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வருடத்தின் முடிவிலேயே வாகனங்களை டெலிவரி செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த வாகனங்களை ஏற்றுமதி செய்யும் எண்ணம் இதுவரை இந்த நிறுவனத்திற்கு வரவில்லையாம். ஆகையால், அமெரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இந்த வாகனம் விற்பனைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Former Harley Davidson Engineer Has Started An Electric Vehicle Company. Read In Tamil.
Story first published: Saturday, March 9, 2019, 17:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X