Just In
- 11 min ago
அப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது!
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 2 hrs ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
Don't Miss!
- Finance
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிக நிறுத்தம்.. எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
4 சிலிண்டர்கள் கொண்ட 250 சிசி நின்ஜா பைக்... கவாஸாகி களமிறக்குகிறது!!
4 சிலிண்டர்கள் கொண்ட 250 சிசி நின்ஜா பைக் மாடலை கவாஸாகி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் நின்ஜா வரிசையில் பல்வேறு சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்தநிலையில், நின்ஜா வரிசையில் புத்தம் புதிய மாடலை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய நின்ஜா பைக் 4 சிலிண்டர்கள் கொண்ட 250 சிசி எஞ்சினுடன் வருவதுதான் இப்போது பைக் பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டோக்கியோ சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இந்த புதிய பைக் காட்சிக்கு கொண்டுவரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தோனேஷியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த பைக்கின் தொழில்நுட்ப விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், இந்த பைக்கில் இருக்கும் 249 சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 39 பிஎச்பி பவரையும், 23.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த பைக் யூரோ-6/ பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாதாக இருக்கும்.

புதிய கவாஸாகி நின்ஜா 250 சிசி பைக்கில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் கொடுக்கப்ப்டடு இருக்கும். முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட இருக்கிறது.

முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றிருக்கும். ரைடு பை ஒயர் தொழில்நுட்பத்துடன் இந்த பைக் வர இருக்கிறது. இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது.

புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் விலை நிர்ணயம் குறித்து பல்வேறு யூகங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் நின்ஜா 300 பைக்கைவிட விலை அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

தற்போது கவாஸாகி நின்ஜா 300 பைக் இந்தியாவில் ரூ.2.98 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய பைக்கை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.
Note: Images for representation purpose only.
Source: 7leopold7