ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஆட்டோமொபைல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாக லைவ்வயர் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம்தான் இந்த பைக்கின் டெலிவிரி பணிகளை ஹார்லி டேவிட்சன் துவங்கியது. இந்த நிலையில், இந்த பைக்கில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

வீடுகளில் குறைந்த மின்னழுத்தம் உள்ள ப்ளக் பாயிண்ட் மூலமாக சார்ஜ் செய்யும்போது இந்த பைக்கில் பிரச்னை ஏற்படுவது தெரிய வந்துள்ளது. மேலும், இறுதிக்கட்ட தர பரிசோதனையிலும் பிரச்னை இருப்பதாக தெரிகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக பிரச்னை குறித்த தகவல் இல்லை. இதையடுத்து, அவசரமாக இந்த பைக்கின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஹார்லி டேவிட்சன் நிறுத்தி வைத்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

கடந்த 2014ம் ஆண்டு ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கின் மாதிரி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 5 ஆண்டு கால முயற்சியில் இந்த பைக் தயாரிப்பு நிலைக்கு ஏற்றதாக மேம்படுத்தப்பட்டது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

இந்த பைக்கில் 15.5 kWh பேட்டரியும், 105 எச்பி பவரையும், 117 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல மின் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 234 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

இந்த பைக் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும் திறன் படைத்தது. மணிக்கு 177 கிமீ வேகம் வரை செல்லும். இந்த பைக்கின் பேட்டரியை 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் டேப்லெட் (இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்) மூலமாக பல்வேறு தகவல்களையும், கட்டுப்பாட்டு வசதிகளையும் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு பெற முடியும். இந்த பைக்கின் செயல்திறன், சார்ஜ் அளவு, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகளை அளிக்கும்.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

இதற்காக வழங்கப்படும் ஹெல்மெட்டை புளூடூத் மூலமாக இணைத்துக் கொண்டு போன் அழைப்புகளை ஹேண்ட்ஸ்ஃப்ரீ முறையில் மேற்கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் டிராக்ஷன் கன்ட்ரோல், முன்சக்கரம் மேலே தூக்காமல் இருக்கச் செய்யும் லிஃப்ட் மிட்டிகேஷன் வசதி, நான்கு டிரைவிங் மோடுகள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

MOST READ: விமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

அமெரிக்காவில் எலெக்ட்ரிஃபை அமெரிக்கா எல்எல்சி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு இடங்களில் இந்த பைக்கிற்கான ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை ஹார்லி டேவிட்சன் ஏற்படுத்தி வந்தது. மேலும், லைவ்வயர் உரிமையாளர்களுக்கு 500 மணிநேரத்திற்கான இலவச சார்ஜ் ஏற்றும் வாய்ப்பையும் வழங்கியது.

MOST READ: பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொறுங்கி விபத்து... வீடியோ!

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி திடீர் நிறுத்தம்... ஏன்?

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் வந்த இந்த எலெக்ட்ரிக் பைக் மாடலின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டு இருப்பது, வாடிக்கையாளர்களையும், ஹார்லி பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பைக்கின் உற்பத்தி இனி எப்போது துவங்கும் என்ற தகவல் இல்லை என்பதால் ஏமாற்றம் நிலவுகிறது.

Most Read Articles

English summary
Harley Davidson has stopped the production of Livewire electric bike due to techincal issues.
Story first published: Tuesday, October 15, 2019, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X