அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் லைவ்வயர் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக தற்போது டீசர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லிடேவிட்சன் நிறுவனம் லைவ்வயர் என்ற பெயரில் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை உருவாக்கி இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை விபரம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் 29,799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21.3 லட்சம்) என்ற விலையில் இந்த பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

இந்த நிலையில், லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய உள்ளது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக, இந்த புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

கடந்த மாதம் ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் பட்டியலிடப்பட்டது. இந்த நிலையில், வரும் 27ந் தேதி இந்த புதிய பைக்கை இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வருகிறது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். இதற்கு முன்னோட்டமாக டீசர்களை தொடர்ந்து வெளியிட்டு இந்திய பைக் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பல சக்திவாய்ந்த பெட்ரோல் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது தெரிந்த விஷயம். ஆனால், அந்நிறுவனம் உருவாக்கிய மிக சக்திவாய்ந்த பைக் மாடலாக லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் குறிப்பிடப்படுகிறது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

இந்த பைக்கில் இருக்கும் ஆற்றள் வாய்ந்த பர்மனென்ட் மேக்னெட் சிங்க்ரோனஸ் மின் மோட்டார் அதிகபட்சமாக 103.5 பிஎச்பி பவரையும், 116.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மின் மோட்டார் வாட்டர் கூல்டு சிஸ்டம் கொண்டுள்ளது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

மேலும், இந்த மின் மோட்டாருக்கு தேவைப்படும் போதிய மின்திறனை வழங்குவதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆற்றல் வாய்ந்த 15.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மணிக்கு 185 கிமீ வேகம் வரை செல்லும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் நகர்ப்புற பயன்பாட்டில் 235 கிமீ தூரம் வரையிலும், நெடுஞ்சாலையில் 113 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். 25W 3 ஸ்டேஜ் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக பேட்டரியை ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் புத்தம் புதிய ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் வடிவமைப்பு வழக்கமான ஹார்லி டேவிட்சன் பைக்குகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

முன்புறத்தில் ஷோவா இன்வெர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. இவை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் வந்துள்ளன. இந்த பைக்கில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 120/70-17 டயரும், பின்புறத்தில் 180/55-17 டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் பிரெம்போ ரேடியல் காலிபர்கள் மற்றும் இரண்டு 300 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்குளும், பின்சக்கரத்தில் 2பிஸ்டன் காலிபர் மற்றும் 260 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய அம்சமாக இருக்கும்.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஹார்லி டேவிட்சனின் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் பைக்!

புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் வரும் 27ந் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படும்போது, விற்பனைக்கு வரும் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், முன்பதிவு துவங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த பைக் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்பதால், வரி உள்பட ரூ.50 லட்சத்தை நெருங்கலாம் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Harley Davidson LiveWire electric Bike To Be Unveiled In India on 27 Aug. Read the details in Tamil.
Story first published: Wednesday, August 21, 2019, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X