ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெகட்ரிக் பைக் இந்தியாவில் பொது பார்வைக்காக இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் கால அளவு உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

பிரம்மாண்டமான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் மிகவும் பராம்பரியமான நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன். இந்த நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை அண்மையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

அந்த வகையில், இன்று இந்தியாவில் ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த பைக் அடுத்த சில மாதங்களில் அல்லது 2020ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் என்ற பெயரிலான இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மிகவும் சக்திவாய்ந்த மாடலாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் ஸ்போர்ட்ஸ்டெர் வகை மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த ஆற்றல் வாய்ந்த பைக்கில் இருக்கும் பர்மனென்ட் மேக்னெட்டிக் மின் மோட்டார் அதிகபட்சமாக 103.5 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க் திறனையும் வழங்கும். லைவ்வயர் பைக் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. இந்த பைக்கில் க்ளட்ச், கியர் ஷிஃப்ட் ஆகியவை இல்லை.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த மின்சார பைக்கில் 15.5 kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் நகர்ப்புறத்தில் 225 கிமீ தூரம் வரையிலும், நெடுஞ்சாலையில் 142 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கலாம்.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக்கின் முதன்மையான லித்தியம் அயான் பேட்டரியை லெவல்-1 சார்ஜர் மூலமாக 12 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். செல்ஃப் ஸ்டார்ட் உள்ளிட்டவற்றுக்காக 12 வோல்ட் திறனுடைய சிறிய பேட்டரியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக்கில் காஸ்ட் அலுமினியத்தாலான இலகுவான அதேசமயம் உறுதிமிக்க ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மிகச் சிறப்பான கையாளுமையை இந்த பைக் வழங்கும். இந்த பைக்கில் முன்புறத்திலும், பின்புறத்திலும் ஷோவா சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த பைக்கில் முன்சக்கரத்தில் பிரெம்போ மோனோபிளாக் காலிபர்கள் மற்றும் இரண்டு 300 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்குகள் கொண்ட பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் உள்ளன. முன்சக்கரத்தில்120 மிமீ அகலமுடைய டயரும், பின்சக்கரத்தில் 180 மிமீ அகலமுடைய மிச்செலின் ஸ்கார்ச்செர் ஸ்போர்ட் டயரும் உள்ளன.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கில் 4.3 அங்குல முழுமையான டிஎஃப்டி வண்ணத் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு உள்ளது. மேலும், ரோடு, ரெயின், ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் என 4 விதமான டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 29,799 டாலர்கள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி வரி சேர்த்து வரும்போது ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன் கொடுக்கப்படுவது சந்தேகமாக உள்ளது.

Most Read Articles
English summary
Harley-Davidson has unveiled their first all-electric motorcycle, the Livewire in the Indian market. The Harley-Davidson Livewire will go on sale in India sometime during the early part of 2020. The electric motorcycle from the American brand is already available in multiple international markets.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X