Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 12 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தன்னலமற்ற சேவை.. புற்றுநோயாளிகளுக்காக வாழ்நாளையே அர்பணித்தவர் மருத்துவர் சாந்தா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அறிமுகமே ஆகாத ஆக்டிவாவிற்கு போட்டியான அறிவிப்பை வெளியிட்ட ஹீரோ... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இன்னும் விற்பனைக்கே அறிமுகமாகாத ஹோண்டா ஆக்டிவா எஃப்ஐ மாடலுக்கு எதிரான அறிவிப்பை, ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அண்மையில் அதன் புகழ்வாய்ந்த இரு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தி அறிவித்திருந்தது.
அந்தவகையில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் அதன் சகோதர மாடலான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய இரு மாடல் பைக்குகளின் விலையைதான் அந்நிறுவனம் உயர்த்தியிருந்தது.

இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேலுமொரு அதன் தயாரிப்பின் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது.
அந்தவகையில், இம்முறை அதன் மிகவும் பிரபல ஸ்கூட்டரான மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலின் விலையை உயர்த்தியுள்ளது.

ஹீரோ நிறுவனம், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலை கடந்த மே மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இந்த மாடலில் மூன்றுவிதமான வேரியண்டுகள் களமிறக்கப்பட்டன.
அதில், ஆரம்ப வேரியண்டான டிரம் பிரேக் ரூ. 58,500 என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 60 ஆயிரம் என்ற விலையிலும், டாப் வேரியண்டான எஃப்ஐ ட்ரிம் ரூ. 62,700 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டன. எஃப்ஐ ரகத்தில் அறிமுகமான இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் இதுதான்.

இந்நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு, வெறும் இரண்டு மாதங்களே ஆனநிலையில், ஹீரோ நிறுவனம், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் விலையை மாற்றியமைத்து அறிவித்துள்ளது. ஆகையால், அதன் அனைத்து வேரியண்டுகளின் விலையிலும் ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், அதன் டிரம் பிரேக் வேரியண்ட் ரூ. 59,500-ஆகவும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் 60,500-ஆகவும், எஃப்ஐ வேரியண்ட் ரூ. 63,200 ஆகவும் விலை உயர்வைப் பெற்றிருக்கின்றன.

இந்த திடீர் விலையுயர்விற்கான காரணத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், உற்பத்தி செலவீணம் காரணமாக இந்த அதிரடி அறிவிப்பை அது வெளியிட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
மேலும், வருகின்ற செப்டம்பர் மாதம் அறிமுகமாக உள்ள புதிய ஹோண்டா ஆக்டிவா எஃப்ஐ மாடலுக்கு எதிராகவும் இதனை செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

2019 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் நவீன தொழில்நுட்ப வசதியாக டிஜிட்டல்/அலாக் மீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், எல்இடி டெயில் லேம்ப், யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், சர்வீஸ் ரிமைன்டர், ரிமோட் கீ ஓபனிங், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், பூட் லைட், ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டர் நான்கு விதமான மேட் ஃபினிஸிங் கொண்ட வண்ணத் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அந்தவகையில், நீலம், பழுப்பு, சாம்பல் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. இத்துடன், பேந்தர் கருப்பு மற்றும் ஃபேட்லெஸ் வெள்ளை ஆகிய இரு கூடுதல் நிறங்களில் மேஸ்ட்ரோ எட்ஜின் எஃப்ஐ வேரியண்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் 125சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே எஞ்ஜின்தான், ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அதேசமயம், இதன் எஃப்ஐ (ப்யூவல் இன்ஜெக்சன்) மாடல் 9.1 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் ஐ3எஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது, அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு திறனை ஸ்கூட்டருக்கு வழங்கும். இந்த வசதி ஹீரோ நிறுவனத்தின் அனைத்து ஸ்கூட்டர்களிலும் இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று, சிறப்பான சஸ்பென்ஷனுக்காக ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் சாதாரண டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் டேம்பரும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்கிங் வசதியாக டிஸ்க் பிரேக் முன்பக்க வீலிலும், டிரம் பிரேக் பின் பக்க வீலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டாண்டர்டு வசதியாக இன்டெக்ரேடட் பிரேக்கிங் சிஸ்டம் அனைத்து மாடல்களிக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் 125, ஹோண்டா கிரேஸியா, அப்ரில்லா எஸ்ஆர் 125 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இந்தியச் சந்தையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.