புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம்

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம்

கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களை காட்சிப்படுத்தியது. ஹீரோ டெஸ்ட்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 என்ற அந்த இரண்டு மாடல்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம்

இந்த நிலையில், ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் கடந்த ஆண்டு அக்டோபரில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இந்த ஸ்கூட்டரின் விற்பனை மாதத்திற்கு மாதம் ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த ஜனவரியில் 20,000 யூனிட்டுகளை கடந்ததுடன், பிப்ரவரியில் 24,000 யூனிட்டுகள் என்ற புதிய இலக்கை எட்டியது. மேலும், டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரையும் விற்பனையில் முந்தியது.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம்

டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்ததாக, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரையும் விற்பனைக்கு களமிறக்க முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம்

ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 124.6 சிசி எஞ்சின்தான் இந்த புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம்

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.70 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரில் ஹீரோ நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ஐ3எஸ் என்ற ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம்

இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வு தன்மையையும் இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவும் இருக்கும்.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம்

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110சிசி ஸ்கூட்டரைவிட இந்த ஸ்கூட்டர் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி, கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் டிசைன் அம்சங்கள் மூலமாக சற்று பிரிமீயமாக காட்சி தருகிறது.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம்

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரானது ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் என்டார்க் 125, சுஸுகி பர்கமேன் ஸ்ட்ரீட் மற்றும் சுஸுகி ஆக்செஸ் உள்ளிட்ட சந்தையில் வலுவான பங்களிப்பை பெற்றிருக்கும் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
As per the media reports, Hero Motocorp is planning to launch the Maestro Edge 125 Scooter in April, 2019.
Story first published: Friday, March 29, 2019, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X