விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!

விற்பனை சரிவால் ஆட்டோமொபைல் துறை போராடி வரும் நிலையில், இந்தியாவின் மிக பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், வருகிற தீபாவளி பண்டிகையின்போது, தங்களது விற்பனை வளர்ச்சியை 10 சதவீதம் அதிகரிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!

தனியார் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை வெகுவாக குறைப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த சலுகையும் ஹீரோ மோட்டார் நிறுவனம் தைரியமாக வரும் பண்டிக்கையில் முதலீடு செய்வதற்கு தூண்டுதலாக அமைவதாக கோவாவில் நடந்த இந்நிறுவனத்தின் டீலர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!

இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற டீலர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் அதிகப்படியான சலுகைகளையும் இலவச திட்டங்களையும் வருகிற பண்டிகை நாட்களில் அள்ளி கொடுக்க விரும்பவில்லை. வாடிக்கையாளர்களுக்கு தேவையான பட்ஜெட் வாகனங்களையே விற்பனை செய்யவுள்ளோம். ஓரளவு கூடுதல் விற்பனை சதவீதம் அதிகரித்தாலே போதும்," என தெரிவித்தார்.

விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!

இதன் மூலம் ஹீரோ மோட்டார் நிறுவனம், பண்டிகை நாட்கள் முடிந்து 30 நாட்கள் கழித்து மீண்டும் பழைய இயல்பான விற்பனை நிலைக்கு வந்தால் கூட பரவாயில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது போல தான் தெரிகிறது.

விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் கூறுகையில், "நாங்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் முதலீடுகளை சில காலமாக நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால் வரும் நிதி ஆண்டில் மூன்று ப்ரீமியம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரு ஸ்கூட்டர்கள் உள்பட ஐந்து புதிய தயாரிப்புகளை ஐந்து மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ளோம்," என கூறினார்.

விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!

அந்த ஐந்து தயாரிப்புகள் என்னென்ன என்பதையும் கூறிய அவர், எக்ஸ்-பல்ஸ் ட்வின்ஸ், எக்ஸ்ட்ரீம் 200எஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 125எஃப்ஐ, ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் மற்றும் பிளஸர்+ 110 ஸ்கூட்டர் என்றார்.

விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!

மேலும், பிஎஸ்-விஐ மாடல்களை வரிசையாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன என்பதையும் அவர் தெரிவித்தார். இந்த மீட்டிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கலந்துகொண்டார்.

விராட் கோலியின் முன்னிலையில் பல முக்கிய திட்டங்களை வகுத்த ஹீரோ மோட்டார் நிறுவனம்!

ஹீரோ மோட்டார் நிறுவனம் தான் முதன்முதலாக பிஎஸ்-6 சான்றிதழை ஆட்டோமோடிவ் டெக்னாலஜியின் இண்டர்நேஷனல் மையத்திடம் இருந்து வாங்கியது. மேலும் ஏற்கனவே சில டீலர்களுக்கு ஸ்ப்லெண்டோர் ஐ-ஸ்மார்ட் பைக்கையும் விற்பனைக்கு அனுப்பிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hero MotoCorp, India’s largest two-wheeler manufacturer, is eyeing sales growth of 10 per cent in the upcoming festive season even as the industry continues to battle an inventory overhang and sluggish credit flow.
Story first published: Thursday, September 26, 2019, 12:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X