டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

2020 டக்கார் ராலியில் இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கேற்க இருக்கும் அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிவேக வீரர் சி.எஸ்.சந்தோஷ் உள்பட 4 பேர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் மிக சவாலான ராலி பந்தயமாக டக்கார் ராலி விளங்குகிறது. இதில் பங்கேற்கும் மோட்டார் பந்தய வீரர்களின் வாகன ஓட்டும் திறமை, உடல்தகுதி, மனநிலை, சமயோஜிதம் உள்ளிட்ட அனைத்தையும் சோதிக்கும் விதத்தில் இந்த டக்கார் ராலி பந்தயம் நடக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு முதல் டக்கார் ராலி பந்தயத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் பங்கேற்று வருகிறது.

டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

2020ம் ஆண்டுக்கான டக்கார் ராலியில் களமிறங்க உள்ள ஹீரோ மோட்டோகார்ப் அணியின் வீரர்கள் மற்றும் பயன்படுத்தப்பட இருக்கும் பைக் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது.

இந்த அணியில் இந்தியாவிலிருந்து முதல்முறையாக டக்கார் ராலியில் பங்கேற்று கலக்கிய சி.எஸ்.சந்தோஷ் உள்பட 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சி.எஸ்.சந்தோஷ் தவிர்த்து, ஜாக்கிம் ரோட்ரிகஸ், ஓரியல் மேனா மற்றும் பாவ்லோ கான்க்ளேவ்ஸ் ஆகிய 4 வீரர்கள் இந்த ஆண்டு டக்கார் ராலியில் ஹீரோமோட்டாகார்ப் சார்பில் பங்கேற்கின்றனர்.

டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

இதில், சி.எஸ்.சந்தோஷ் இந்தியாவின் அதிவேக வீரர் என்ற பெருமைக்குரியவர் என்பதுடன் டக்கார் ராலியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தான் பங்கேற்ற முதல் டக்கார் ராலி பந்தயத்திலேயே குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து அசத்தியவர்.

இதுதவிர்த்து, ஜாக்கிம் ரோட்ரிகஸ் 2019ம் ஆண்டுக்கான ஆப்ரிக்க ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர். 2017ம் ஆண்டு டக்கார் ராலியின் டக்கார் ரூக்கி என்ற மிக குறுகிய காலத்தில் டக்கார் ராலியில் பங்கேற்பவர்களுக்கான சிறப்பு பட்டத்தை பெற்றவர். ஹீரோ அணியில் புதிதாக சேர்ந்திருக்கும் பாவ்லோ கான்க்ளேவ்ஸ் என்ற வீரர் தேசிய அளவிலான ராலி பந்தயத்தில் சாம்பியன் பெற்ற பெருமைக்குரியவர்.

டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியின் மேலாளர் வோல்ஃப்கேங் ஃபிசெரின் தலைமையில் 2020ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தை ஹீரோ மோட்டோகார்ப் அணி சந்திக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அணி மேலாளர் பிச்செர்," 2020ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தில் வலுவான அணியாகவும், மிக முக்கிய இடத்தையும் பிடிக்க விரும்புகிறோம். டக்கார் ராலி பந்தயத்திற்கு சீரிய முறையில் தயாராகி வருகிறோம். வீரர்கள் நல்ல உடல் தகுதியை பெற்றிருக்கின்றனர்.

டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

டக்கார் ராலிக்காக உருவாக்கப்பட்டுள்ள பைக்குகள் எந்த தொழில்நுட்ப பிரச்னையும் இல்லாமல் சிறப்பான செயல்திறனை வழங்கும். இறுதிக்கட்ட முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். நிச்சயம் எங்களது திறனை பரைசாற்றுவதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் டக்கார் ராலியை நிறைவு செய்வோம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பாட்டு பிரிவு அதிகாரி விக்ரம் கஸ்பெகர் கூறுகையில்," மிக குறைவான காலத்தில் டக்கார் ராலி பந்தய அணி குறிப்பிடத்தக்க மைல்கற்களை பதிவு செய்துள்ளது.

டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

டக்கார் ராலியில் பங்கேற்பதன் மூலமாக எங்களது எதிர்கால பைக் மாடல்களில் சில முக்கிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில தொழில்நுட்பங்கள் ஏற்கனவே ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ராலி கிட் ஆகியவற்றில் பயன்படுத்தியுள்ளோம்," என்று தெரிவித்தார்.

டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

2020 டக்கார் ராலி உலகின் மிகவும் சவாலான டக்கார் ராலி பந்தயத்தில் பங்கேற்பது மோட்டார் பந்தய வீரர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், 2020ம் ஆண்டு நடக்க உள்ள 42வது டக்கார் ராலி பந்தயம் முதல்முறையாக சவுதி அரேபியாவில் நடத்தப்பட இருக்கிறது.

டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

வரும் ஜனவரி 5ந் தேதி ஜெத்தா நகரில் 2020ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயம் துவங்க உள்ளது. மொத்தம் 12 கட்டங்களாக இந்த ராலி பந்தயம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 7,900 கிமீ தூரத்திற்கு நடக்க இருக்கும் இந்த பந்தயத்தில் 5,000 கிமீ பந்தயமானது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். கரடுமுரடான மலைப்பாங்கான சாலைகள், மணல் பொதிந்த பாலைவனம் உள்ளிட்டவைகள் வழியாக செல்ல இருக்கிறது. இந்த போட்டியில் சரியான வழியில் வாகனத்தை செலுத்துவது வீரர்களுக்கு மிகவும் கடினமான செயலாக இருக்கும் என்று மோட்டார் பந்தய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சவூதி அரேபியத் தலைநகர் ரியாத் அருகிலுள்ள கிதியாத் என்ற இடத்தில் பந்தயம் நிறைவுபெறும்.

டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

ஹீரோ மோட்டோகார்ப் மோட்டார் பந்தய அணி கடந்த 2016ம் ஆண்டு ஹீரோ மோட்டார் பந்தய அணி உருவாக்கப்பட்டது. ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மோட்டார் பந்தய பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நடந்த பாஜ ஸ்பெயின், இந்தியாவின் டெசர்ட் ஸ்ட்ரோம், ரஷ்யாவில் நடந்த சில்க்வே ராலி, சிலியில் நடந்த அடகாமா ராலி, மொராக்கோவில் நடந்த பான் - ஆப்ரிக்கா ராலி என உலக அளவில் பல்வேறு மோட்டார் பந்தயங்களிலும் ஹீரோ மோட்டோகார்ப் அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளையும், முக்கிய இடத்தையும் பதிவு செய்து வருகிறது.

டக்கார் ராலியை கலக்கப்போகும் ஹீரோ மோட்டோகார்ப் அணி வீரர்கள் விபரம் வெளியீடு

2020 டக்கார் ராலி

ஐரோப்பா- ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்க கண்டங்களில் நடந்து வந்த டக்கார் ராலி முதல்முறையாக ஆசிய கண்டத்தில் நடக்க இருக்கிறது. இது மோட்டார் பந்தய ஆர்வலர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வழக்கம்போல் 2020ம் ஆண்டு டக்கார் ராலியும் விறுவிறுப்புக்கு பஞ்மில்லாமல் இருக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Hero MotorSports Team Rally — the motorsports division of Hero MotoCorp has just announced its four riders for the upcoming 2020 Dakar Rally. This will be the fourth consecutive Dakar rally where the team will be participating, after being established in 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X