பிஎஸ்-6 எஞ்சினுடன் வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர் 110 பைக் !

ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் 110 பைக்கில் விரைவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர் 110 பைக் !

இந்தியர்களின் மத்தியில் அதிக நன்மதிப்பை பெற்ற பைக் பிராண்டாக ஹீரோ ஸ்பிளென்டர் விளங்குகிறது. இதன் ஐ-ஸ்மார்ட் 110 சிசி மாடல் தொழில்நுட்ப அளவில் மிகச் சிறந்த தேர்வாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் 110 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் வர அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர் 110 பைக் !

அதாவது, பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் 110 பைக் வர இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 109 சிசி எஞ்சின் அதிகபட்மாக 9.3 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சின்தான் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர் 110 பைக் !

இந்த எஞ்சின் லிட்டருக்கு 75 கிமீ வரை மைலேஜ் தரும் என்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 8.5 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 600 கிமீ தூரத்திற்கு மேல் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர் 110 பைக் !

எஞ்சின் மட்டுமின்றி, தோற்றத்திலும் புதுப்பொலிவுடன் இந்த பைக் வர இருக்கிறது. அதாவது, புதிய ஸ்டிக்கர் மற்றும் பிஎஸ்-6 பேட்ஜ் ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகளிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர் 110 பைக் !

ஏற்கனவே இந்த புதிய மாடலானது டீலர்களுக்கு அனுப்பும் பணி துவங்கப்பட்டுவிட்டது. வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் 110 பைக்கின் பிஎஸ்-6 மாடாலானது ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும். இந்த பைக் 110 சிசி ரகத்தில் மிகச் சிறந்த தேர்வாக அமையும் என்று வாடிக்கையாளர் மத்தியில் ஆவல் இருக்கிறது.

Most Read Articles

English summary
Hero Motocorp is gearing up to launch the updated Splendor iSmart 110 with BS-VI compliant engine model before Diwali in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X