கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் கடுமையான மத்தியிலும் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

நமது நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் முக்கிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் மிகப்பெரிய போட்டியாளரான ஹோண்டாவை கடுமையான போட்டிக்கு மத்தியில் வீழ்த்தியுள்ளது.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

அந்தவகையில், கடந்த ஜூன் மாத விற்பனையில் ஹீரோ நிறுவனத்தன் ஸ்பிளெண்டர் பைக்கின் 2,42,743 யூனிட்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேசமயம், ஹோண்டா நிறுவனத்தன் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரான, ஆக்டிவா 2,36,739 யூனிட்கள் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டுள்ளன.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

இந்த வளர்ச்சியை நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஸ்பிளெண்டர் பைக் பெற்று வருகின்றது.

இந்திய ஆட்டோ மொபைல் துறை கடந்த சில மாதங்களாக மிகப் பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாகவே, கடுமையான போட்டிக்கு மத்தியில் ஹீரோ நிறுவனம் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக நாம் கூறுகின்றோம்.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய பங்கினை வகிப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இத்துறை கடந்த சில காலங்களாக ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இதன் பின்விளைவாக, இந்தியா பல்வேறு பிரச்னைகளை சந்திக்க இருப்பதாக, பொருளாதார வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இத்தகைய சூழ்நிலையில், ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் பெற்றிருக்கும் இந்த விற்பனை வளர்ச்சி, வரவேற்க தக்க வகையில் அமைந்துள்ளது. அதேசமயம், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும், நடப்பாண்டு துவங்கியதில் இருந்தே ஏற்றம் மற்றும் இறக்கம் ஆகிய இரண்டையும் கண்ட வகையில், வளர்ச்சியையேப் பெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

அதேசமயம், அவை கடந்த 2018ம் ஆண்டைக் காட்டிலும் குறைவான விற்பனையாக இருக்கின்றது. அந்தவகையில், கடந்த ஆண்டு ஜீன் மாதத்தில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கின் 2,78,169 யூனிட்கள் விற்பனையாகி இருந்தன. ஆனால், நடப்பாண்டின் ஜீன் மாதத்திலோ 2,42,743 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

அதேபோன்று, கடந்த ஆண்டு ஜீன் மாத விற்பனையில் 2,92,294 யூனிட் ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து, ஹீரோ ஸ்பிளெண்டரை வீழ்த்திய ஹோண்டா நிறுவனம், தற்போது 6,004 யூனிட்களை குறைவாக விற்பனைச் செய்து பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்த முழுமையான தகவல் பட்டியலை கீழே காணலாம்...

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!
ஸ்பிளெண்டர் ஆக்டிவா வித்தியாசம் சதவீதம்
ஜூன்-19 2,42,743 2,36,739 6,004 2.54
மே-19 1,99,225 2,18,734 -19,509 -8.92
ஏப்ரல்-19 2,23,532 2,10,961 12,571 5.96
மார்ச்-19 2,46,656 1,48,241 98,415 66.39
பிப்ரவரி-19 2,44,241 2,05,239 39,002 19.00
ஜனவரி-19 2,23,909 2,13,302 10,607 4.97
ஜூன்-18 2,78,169 2,92,294 -14,125 -4.83
மே-18 2,80,763 2,72,475 8,288 3.04
ஏப்ரல்-18 2,66,067 3,39,878 -73,811 -21.72
மார்ச்-18 2,62,232 2,07,536 54,696 26.35
பிப்ரவரி-18 2,38,722 2,47,337 -8,615 -3.48
ஜனவரி-18 2,31,356 2,43,826 -12,470 -5.11
கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பைக்காக ஹீரோ நிறுவனத்தின் இந்த ஸ்பிளெண்டர் பைக் இருக்கின்றது. இந்த பைக் கடந்த 25 ஆண்டுகளையும் கடந்து தற்போது விற்பனையில் வீர நடை போட்டு வருகின்றது.

இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த கால் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக, ஸ்பிளெண்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை இந்தியர்களுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

அந்த பைக்கிற்கு, புதிய வண்ணம் மற்றும் ஸ்பெஷல் காஸ்மெடிக் அப்டேட் உள்ளிட்டவற்றை அந்நிறுவனம் வழங்கியிருந்து. ஆகையால், ஸ்டாண்டர்டு ஸ்பிளெண்டரைக் காட்டிலும் ஸ்பெஷல் எடிசன் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு காணப்படும் இந்த பைக்கில், 3எஸ் டெக்னாலஜியுடன் கூடிய 97.2 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் ஏர் கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.36 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இந்தியாவில் ரூ. 56,600 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

அதேபோன்று, சந்தையில் நிலவி வரும் போட்டி மற்றும் குறைவான விற்பனை உள்ளிட்ட காரணங்களைச் சமாளிக்கும் விதமாக ஹோண்டா நிறுவனமும் அதன் ஆக்டிவா ஸ்கூட்டரை ஸ்பெஷல் எடிசனில் அண்மையில் அறிமுகம் செய்தது.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

ட்யூவல் டோன் கலரில் காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டர், ஸ்பெஷலான வண்ணம் மற்றும் புதிய சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக களமிறக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், சிறப்பம்சங்களாக குரோம் மெட்டல் மஃப்ளர் கவர், மறு வேலைபாடு செய்யப்பட்ட இருக்கை, புதிய பக்கவாட்டு பேனல்கள் மற்றும் முன்பக்க மட்குவார்ட் ஃபெண்டரில் முல்லைப் போன்ற கோடுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

இத்தகைய சிறப்பம்சங்களைப் பெற்ற இந்த ஸ்கூட்டர், அதன் ஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் ரூ.400 மட்டுமே அதிக விலையைக் கொண்டதாக களமிறக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, இந்த ஸ்கூட்டர் ரூ. 55.032 - ரூ. 58.897 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆக்டிவாவை வீழ்த்திய ஸ்பிளெண்டர்: ஆனந்த களிப்பில் ஹீரோ...!

இந்த ஸ்கூட்டரில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில், சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hero Splendor Beats Honda Activa Sales. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X