பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் அறிமுகம்!

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக் குறித்த சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் அறிமுகம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிஎஸ்-6 மாடலாக ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் எஞ்சின் மட்டுமின்றி, சில முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கில் புதிய டைமண்ட் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ஃப்ரேம் மூலமாக பைக்கின் நிலைத்தன்மை சிறப்பாக இருக்கும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் அறிமுகம்!

மேலும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 15 மிமீ அதிகரிக்கப்பட்டு 180 மிமீ ஆக மாறி இருக்கிறது. இது நிச்சயம் இந்திய சாலை நிலைகளுக்கு உகந்த அம்சமாக கருத முடியும். அதேநேரத்தில், தரையிலிருந்து இருக்கையின் உயரத்தில் எந்த மாறுதலும் இல்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் அறிமுகம்!

புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கின் சஸ்பென்ஷனின் டிராவல் நீளம் 15 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வீல் பேஸ் நீளம் 36 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அதிக நிலைத்தன்மையுடன் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வாய்ப்புள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் அறிமுகம்!

ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பிஎஸ்-4 பைக் மாடலில் 109.15 சிசி கார்புரேட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பிஎஸ்-6 மாடலில் 113.2 சிசி திறன் கொண்ட ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், பிஎஸ்-4 எஞ்சின் 9.5 எச்பி பவரை அளிக்கும் நிலையில், புதிய பிஎஸ்-6 எஞ்சின் 9.1 எச்பி என்ற அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்துவதாக வந்துள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் அறிமுகம்!

அதேநேரத்ில், டார்க் திறன் 10 சதவீதம் கூடியிருக்கிறது. தற்போது வந்துள்ள பிஎஸ்-6 எஞ்சின் அதிகபட்சமாக 9.89 என்எம் டார்க் திறனை வழங்கும். இந்த பைக்கில் ஹீரோ நிறுவனத்தின் ஐ3எஸ் என்ற ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் உள்ளது. சிக்னல்களில் குறிப்பிட்ட வினாடிகளில் வண்டி நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்துவிடும். இதன்மூலமாக கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும், மாசு உமிழ்வையும் குறைக்கும் வாய்ப்பை வழங்கும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் அறிமுகம்!

புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் 110 பைக் மாடலுக்கு ரூ.64,900 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் பிஎஸ்-4 மாடலைவிட ரூ.7,500 வரை கூடுதல் விலையில் வந்துள்ளது. இந்த புதிய பைக் 3 முதல் 4 வாரங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஹீரோ டீலர்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
India's largest two wheeler maker, Hero Motocorp has launched of its first BS6 two-wheeler – the new Splendor iSmart 110 bike in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X