25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...

25 ஆண்டுகால இருப்பை கொண்டாடும் விதமாக ஸ்பிளெண்டர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடலை ஹீரோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...

இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்று ஸ்பிளெண்டர் (Splendor). கடந்த 1994ம் ஆண்டு முதல் ஸ்பிளெண்டர் பைக் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்திருந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை ஸ்பிளெண்டர் அடைய தொடங்கியது.

25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...

இந்திய ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையிலும், ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் இணைந்திருந்த சமயம் பொற்காலமாக கருதப்படுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக பல்வேறு காரணங்களால் ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் கடந்த 2011ம் ஆண்டு தங்கள் உறவை முறித்து கொண்டன.

25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...

வழக்கமான டாப் செல்லராக இருந்தாலும் கூட ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் பிரிவிற்கு பின், ஸ்பிளெண்டர் பைக்கின் எதிர்காலம் தொடர்பாக நிச்சயமற்ற சூழல் நிலவி வந்தது. ஆனால் பல்வேறு தடைகளையும் கடந்து இன்றும் ஸ்பிளெண்டர் வெற்றிநடை போட்டு கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...

25 ஆண்டுகளை கடந்தும் கூட இந்தியாவின் உள்நாட்டு மார்க்கெட்டில் இன்றளவும் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக ஹீரோ ஸ்பிளெண்டர் நீடித்து வருகிறது. மார்க்கெட்டில் கால் நூற்றாண்டு கால இருப்பை கொண்டாடும் விதமாக, ஸ்பிளெண்டர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...

இதன் எக்ஸ் ஷோரூம் விலை 56,600 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பிளெண்டர் ப்ளஸ் வேரியண்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல், புதிய கலர் ஸ்கீம் மற்றும் கிராபிக்ஸை பெற்றுள்ளது. கருப்பு நிற பின்னணியில், மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிற கலவையில் இந்த பைக் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு ஆபத்து... மலையை சரிக்க களமிறங்கும் புதிய கார்கள் இவைதான்...

25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...

ஸ்டாண்டர்டு ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக், பிளாக் உடன் பர்ப்பிள், கேண்டி ப்ளாசிங் ரெட், க்ரீன் உடன் ஹெவி க்ரே, சில்வர் உடன் பிளாக் மற்றும் க்ளவுட் சிலர் ஆகிய பெயிண்ட் ஸ்கீம்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது...

25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...

அதேநேரத்தில் மேலும் சில ஹைலைட்டான விஷயங்களும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு அலாய் வீல்கள், யுஎஸ்பி சார்ஜர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதுதவிர விண்டு ஸ்கீரின் மற்றும் சைடு பாடி பேனல்களில், ''25 years special edition'' ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: முதல் முறை இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்: ஸ்பை படங்கள் கசிந்தன!

25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...

ஆனால் ஐ3எஸ் டெக்னாலஜியுடன் கூடிய 97.2 சிசி சிங்கிள்-சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் ஏர்-கூல்டு ஓஎச்சி இன்ஜினுடன் இந்த மோட்டார்சைக்கிள் தொடர்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 8.36 பிஎஸ் பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 8.05 என்எம் டார்க திறனையும் உருவாக்க கூடியது. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Splendor Plus 25 Years Special Edition Launched In India. Read in Tamil
Story first published: Thursday, May 23, 2019, 19:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X