புதிய அப்டேட்டுகளுடன் ஒரே நாளில் அறிமுகமாகும் ஹீரோவின் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்...!

ஹீரோ நிறுவனம் அதன் பிரபலமான இரண்டு ஸ்கூட்டர்களை வருகின்ற 13ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய அப்டேட்டுகளுடன் ஒரே நாளில் அறிமுகமாகும் ஹீரோவின் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்: எந்தெந்த ஸ்கூட்டர்கள் தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில் இரண்டு 125சிசி திறனுடைய ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. அதில், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் டூயட் 125 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களைத் தான் அந்த நிறுவனம் காண்காட்சியில் அறிமுகம் செய்தது.

புதிய அப்டேட்டுகளுடன் ஒரே நாளில் அறிமுகமாகும் ஹீரோவின் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்: எந்தெந்த ஸ்கூட்டர்கள் தெரியுமா?

இதில், டூயட் 125 ஸ்கூட்டருக்கு மாற்றாக, தற்போது டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து, நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பில் இருந்த, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

புதிய அப்டேட்டுகளுடன் ஒரே நாளில் அறிமுகமாகும் ஹீரோவின் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்: எந்தெந்த ஸ்கூட்டர்கள் தெரியுமா?

இதனை உறுதி செய்யும் விதமாக, ஆட்டோ கார் இந்தியா ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இம்மாதம் 13ம் தேதி மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ப்ளஷர் 110 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய அப்டேட்டுகளுடன் ஒரே நாளில் அறிமுகமாகும் ஹீரோவின் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்: எந்தெந்த ஸ்கூட்டர்கள் தெரியுமா?

கார்ப் மற்றும் எஃப்ஐ ஆகிய இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஸ்கூட்டரின் முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகின்றது. இத்துடன் ஐ3எஸ் எனப்படும் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் நிரந்தர அம்சமாக வழங்கப்படுகிறது.

புதிய அப்டேட்டுகளுடன் ஒரே நாளில் அறிமுகமாகும் ஹீரோவின் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்: எந்தெந்த ஸ்கூட்டர்கள் தெரியுமா?

மேலும், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சில நிரந்தர அம்சங்களுடன் தொழில்நுட்ப அம்சங்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, சர்வீஸ் ரிமைண்டருடன் கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், டுயூவல் டோன் கண்ணாடிகள், பூட் லைட், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் மற்றும் வெளிப்புற ஃப்யூவல் பில்லர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய அப்டேட்டுகளுடன் ஒரே நாளில் அறிமுகமாகும் ஹீரோவின் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்: எந்தெந்த ஸ்கூட்டர்கள் தெரியுமா?

தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரில் 124.6சிசி திறனை வெளிப்படுத்தும் ஏர் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.70 பிஎச்பி பவரை 6,750 ஆர்பிஎம்-லும், 10.2 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்-லும் வெளிப்படுத்தும். இத்துடன், பயணிகளின் சொகுசான பயண அனுபத்திற்காக, முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் டேம்பர் வசதி கொண்ட சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய அப்டேட்டுகளுடன் ஒரே நாளில் அறிமுகமாகும் ஹீரோவின் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்: எந்தெந்த ஸ்கூட்டர்கள் தெரியுமா?

இதோபோன்று, ப்ளஷர் ஸ்கூட்டரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், எஞ்ஜின் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவை கணிசமான அப்டே்டடைப் பெற்றுள்ளது. அவ்வாறு, 102சிசி வெளிப்படுத்தும் எஞ்ஜினுக்கு மாற்றாக 110 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8.1 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் வழங்கும்.

புதிய அப்டேட்டுகளுடன் ஒரே நாளில் அறிமுகமாகும் ஹீரோவின் இரண்டு பிரபலமான ஸ்கூட்டர்கள்: எந்தெந்த ஸ்கூட்டர்கள் தெரியுமா?

இத்துடன் இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் பாதுகாப்பு வசதியாக சிபிஎஸ் வசதியுடன் கூடிய டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர்களின் அதிகாரப்பூர்வமான விலை குறித்த அதிகாரப்பூர்வமான இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகையால், ஸ்கூட்டர்கள் குறித்த சில முக்கியமான தகவல்கள் விற்பனை அறிமுகத்தின்போதுதான் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero Will Launch Maestro Edge 125 & Pleasure 110 On May 13. Read In Tamil.
Story first published: Thursday, May 9, 2019, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X