போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்களாக களமிறங்கும் சக்தி வாய்ந்த ஹீரோ பைக்குகள்: விற்பனை தேதி!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகளின் விற்பனை தேதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

மோட்டார்சைக்கிள் உலகின் ஜாம்பவானான ஹீரோ நிறுவனம், இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை வருகின்ற மே மாதம் 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை கார்டாக் இணையதளம் வெளியிட்டுள்ளது.

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

அந்தவகையில், எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு புதிய மாடல்களைத்தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த இரு மாடல்களில், எக்ஸ்பல்ஸ் 200 மாடல் மோட்டார்சைக்கிளினை கான்செப்ட் மாடலாக, கடந்த 2017ம் ஆண்டே இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது.

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

இதைத்தொடர்ந்து, அந்த மாடலின் உற்பத்தி வெர்ஷனை கடந்த 2018ம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதேப்போன்று, டூரிங் மாடலான எக்ஸ்பல்ஸ் 200டி மாடலை, கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது.

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

பின்னர், இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் விற்பனைக்கு அறிவிக்கும் முன்னதாக, சாலையில் வைத்து பரிசோதனை செய்யும் பணியில் ஹீரோ நிறுவனம் அவ்வப்போது ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், நீண்ட நாள் இழுபறிக்கு பின்னர், இந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் வருகின்ற மே மாதம் 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

அவ்வாறு புதிதாக விற்பனைக்கு களமிறங்க இருக்கும் இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஆஃப் ரோட் பயணத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இதில், எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் சற்று உயரமாக சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

READ MORE: இனி பைக்கர்கள் மழையைக் கண்டு பயப்பட வேண்டாம்: ஹெல்மெட்டிற்கும் வந்துவிட்டது வைப்பர்...!

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

ஆகையால், இந்த மோட்டார்சைக்கிளின்மூலம் ஆஃப்ரோடு சாலைகளான காடு, மலை மற்றும் நீர் நிறைந்த பகுதிகளில் செல்வது சுலபமாக இருக்கும். மேலும், இதற்கேற்ப, மோட்டார்சைக்கிளின் முன்பக்கத்தில் 21 இன்ச் கொண்ட ஸ்போக்ஸ் வீலும், பின்பக்கத்தில் 18 இன்ச் கொண்ட ஸ்போக்ஸ் வீலும் பொருத்தப்பட்டுள்ளன.

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

இத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில் பாதுகாப்பு அம்சமாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறந்த பயண அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில், முன்பக்கத்தில் 190எம்எம் உயர டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 170எம்எம் உயர மோனோசாக்ஸும் பொருத்தப்பட்டுள்ளன. ஆகையால், இது ஆஃப் ரோடு பயணத்தின்போது ரைடர்களுக்கு சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும்.

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

இதேபோன்று, டூரிங் வெர்ஷனான எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிளில், 17 இன்ச் கொண்ட அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 30mm-ஆக உள்ளது. இதன் ஹேண்டில் பார்கள் எக்ஸ்பல்ஸ் 200 மாடலைக் காட்டிலும் சற்று தாழ்வாகவும், நேராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிரேக் உள்ளிட்ட சில பாகங்களை எக்ஸ்பல்ஸ்200 மோட்டார்சைக்கிளுடன் பகிர்ந்து கொள்கிறது.

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

ஆனால் ஸ்டைல் மற்றும் சஸ்பென்ஸன் செட் அப் உள்ளிட்ட அம்சங்கள் மாற்றம் கொண்டுள்ளன. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, 199.5 சிசி கொண்ட ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. இது, அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவரையும், 17.1 என்எம் டார்க் திறனை வழங்கும். மேலும், இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

இத்துடன், இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும், இரண்டு இருக்கைகளும், லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக பின்பக்கத்தில் மவுண்டிங் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், யுஎஸ்பி சார்ஜிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ப்ளூ-டூத் கன்னெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

READ MORE: நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா?

போட்டிக்கு ஆளே இல்லாம தனி காட்டு ராஜாக்காளாக களமிறங்கும் இரண்டு சக்தி வாய்ந்த ஆஃப் ரோடு பைக்குகள்: விற்பனை தேதி வெளியீடு!

இந்த இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களும் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கலாம் என எதிபார்க்கப்படுகிறது. இதற்கு போட்டியாக ராயல் என்பீல்டின் ஹிமாலயன் 400 மோட்டார்சைக்கிள் மட்டும்தான் உள்ளது. ஆனால், அதன் விலை ரூ. 2 லட்சமாக இருக்கிறது. ஆகையால், மலிவான விலையில் களமிறங்க இருக்கும் எக்ஸ்பல்ஸ்200 மற்றும் 200டி ஆகிய இரண்டு மாடல்களும் போட்டிக்கு ஆளில்லாமல் தனிக்காட்டு ராஜாவாக விற்பனையைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hero Xpulse 200-200T Launch Date & Price. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X