ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

இத்தாலியில் தற்சமயம் ஐக்மா ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிளின் ராலி கிட் எடிசன் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது ஓட்டுதல் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கான பிரத்யேக ஆக்செஸரீகள் மற்றும் உதிரிபாகங்கள் அடங்கிய பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'ராலி கிட்' என்ற பெயரிலான இந்த பிரத்யேக பேக்கேஜில் இருக்கும் ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்தான் தற்போது ஐக்மா கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

இந்த பிரத்யேக ஆக்சஸெரீகள் மற்றும் உதிரிபாகங்கள் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் பொருத்தப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், சாதாரண சாலைக்கு உகந்தவையா என்பதற்கான சோதனைகள் மற்றும் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே செயல்பட்டு வரும் ஹீரோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, சென்டர் ஆப் இன்னோவேஷன்& டெக்னாலஜி (சிஐடி) அமைப்பின் சோதனை களத்தில் வைத்து இந்த ஆக்சஸெரீகள் மற்றும் உதிரிபாகங்கள் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் பொருத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் பைக் மாறுபட்ட நிலப்பரப்பில் வைக்கப்பட்டுள்ளதால், எக்ஸ்பல்ஸ் பைக் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிவது கடினமாகவுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கான இந்த ராலி கிட் என்ற பிரத்யேக பேக்கேஜில் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நீண்ட முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷன், ஆப்-ரோடிலும் எளிதாக அமர்ந்துள்ள நிலையை சரி செய்யும் விதமான இருக்கை, ஆப்-ரோடில் கால் பாதங்கள் பிடிப்பாக இருக்க பெரிய கியர் பெடல், எழுந்து நின்றுக்கூட ரைடிங் செய்யும் விதமாக சிறந்த முறையில் மாற்றப்பட்ட ஹேண்டில்பார் ரைசர்ஸ் போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்படுகின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

மேலும் சரியான பேலன்ஸ் உடன் நிற்பதற்காக நீண்ட சைடு ஸ்டாண்ட், சக்கரத்தில் இருந்து அளவான சப்தம் வருவதற்காக முன்புறத்தில் 12 பற்கள் கொண்ட ஸ்ப்ராக்கெட், பின்புறத்தில் 40 பற்கள் கொண்ட ஸ்ப்ராக்கெட் உள்ளன. அதிக தரைப்பிடிப்பை வழங்கும் ராலி ரேஸ் பந்தயங்களுக்கான விசேஷ டயர்கள் போன்ற அசத்தலான அம்சங்களும் இந்த எக்ஸ்பல்ஸ் ராலி கிட் பேக்கேஜில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிளின் மூன்றாவது வேரியண்ட்டான ராலி எடிசன், ஆப்-ரோடில் மிகவும் தாறுமாறாக பைக்கை ஓட்ட விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டயர்கள், அதிகபட்ச கிரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் மோட்டோகிராஸ்-ஸ்டைலில் நீளமான இருக்கையுடன் அறிமுகமாகியுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

இதுதவிர கிராபிக்ஸ் டிசைன்களை பார்த்தால், பைக்கின் மைய பேனலில் ரேசிங் நம்பர், பைக்கின் உடல் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் சிறிய அளவிலான பாதுகாப்பு பாகங்கள் உள்ளன. இதனால் எக்ஸ்பல்ஸின் இந்த ராலி எடிசனை முதன்முறை பார்க்கும்போது பிடிக்காதவர்களுக்கு கூட, ஆப்-ரோடில் இந்த பைக்கை ஓட்டி சென்றால் கட்டாயம் பிடித்து போய்விடும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

இந்த எக்ஸ்பல்ஸ் பைக் குறித்து ஹீரோ மோட்டோகார்ப்பின் உலகளாவிய தயாரிப்பு மற்றும் திட்டமிடல் அமைப்பின் தலைமை அதிகாரி மாலோ லு மாஸன் கூறுகையில், எக்ஸ்பல்ஸ் ராலி கிட் பைக் உலகம் முழுவதும் உள்ள ராலி ரேசிங்கை விரும்பும் இளைஞர்களுக்காக பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ராலி கிட் பைக்கை சாதாரண சாலைக்கு பயன்படுத்தலாம் என உறுதியாக கூற முடியாது. நகரப்புற சாலைகளுக்கும் ஏற்ற ராலி கிட்டை ஹீரோ மோட்டாகார்ப் தயாரிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுப்பட்டு வருகிறது. தற்போது கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள இந்த ராலி கிட்டில் மோட்டார்சைக்கிளின் வழக்கமான திறன்கள் அனைத்தும் இருக்கும். அதேசமயம் இந்த பைக் ஆப்-ரோடு மற்றும் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

வணிக உத்திக்காக சாதாரண சாலைக்களுக்கு ஏற்ற மோட்டார்சைக்கிள்களையே பெருமளவில் தயாரித்து அறிமுகப்படுத்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து ஆப்-ரோடிற்கு ஏற்ற இந்த ராலி கிட் பைக் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. எக்ஸ்பல்ஸ் பைக்கின் இந்த ராலி கிட் எடிசன் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகவுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hero Xpulse 200 Rally Kit showcased – Launch by 2020 Feb
Story first published: Wednesday, November 6, 2019, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X