ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்.. மலிவான விலை

ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்.. மலிவான விலை

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 (Hero XPulse 200) மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி (XPulse 200T) ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்விரு மோட்டார்சைக்கிள்களையும் இந்திய வாடிக்கையாளர்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்.. மலிவான விலை

இந்த சூழலில் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களும் மே 1ம் (இன்று) தேதியன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதன்படி இவ்விரு மோட்டார்சைக்கிள்களும் இந்தியாவில் இன்று லான்ச் செய்யப்பட்டன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்.. மலிவான விலை

இதில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடலானது ஆஃப் ரோடு மற்றும் அட்வென்ஜர் மோட்டார்சைக்கிள் ஆகும். அதே நேரத்தில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடலானது, இந்த மோட்டார்சைக்கிளின் ஆன் ரோடு டூரர் வெர்ஷன் ஆகும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்.. மலிவான விலை

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் முன் பக்கத்தில், 21 இன்ச் ஸ்போக் சக்கரமும், பின் பக்கத்தில் 18 இன்ச் ஸ்போக் சக்கரமும் வழங்கப்பட்டுள்ளது. மேல் நோக்கி எழும்பியவாறு உள்ள மட்கார்டு அமைப்பு, இன்ஜின் பேஸ் பிளேட் ஆகியவையும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளில் இடம்பெற்றுள்ளன. இதன் எக்ஸாஸ்ட் மேல்நோக்கி உயர்த்தப்பட்ட நிலையில் வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்.. மலிவான விலை

மறுபக்கம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள், ஆன் ரோடு வெர்ஷன் ஆகும். இதில், அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆன் ரோடுக்கு ஏற்ற வகையில் இந்த சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களின் இரு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பிற்காக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியையும் ஹீரோ நிறுவனம் ஸ்டாண்டர்டாக வழங்குகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்.. மலிவான விலை

இந்த சூழலில் வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடலின் விலை ரூ.94 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் கார்ப் வெர்ஷனின் (Carb Version) விலை ரூ.97 ஆயிரமாகவும், FI வெர்ஷனின் விலை ரூ.1.05 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்.. மலிவான விலை

இதுதவிர ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் என்ற மாடலும் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 98 ஆயிரத்து 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்). எதிர்பார்க்கப்பட்டது போலவே ஓரளவிற்கு குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்த புதிய மாடல்கள் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்.. மலிவான விலை

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் ஆகிய மூன்று மாடல்களிலும் 199.6 சிசி, ஏர் கூல்டு, 2 வால்வு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 18 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 17.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் ஆகிய மாடல்கள் கார்புரேட்டருடன் வருகின்றன. அதே நேரத்தில், எக்ஸ்பல்ஸ் 200 ப்யூயல் இன்ஜெக்ஸன் (Fuel Injection) ஆப்ஷனையும் பெற்றுள்ளது. இந்த மூன்று மாடல்களிலும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த மூன்று மாடல்களின் டெலிவரி மே மாத இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero Xpulse 200, Xpulse 200t Launched In India: Price, Specs, Features, Images
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X