3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த 5 புதிய மாடல்களின் டெலிவரி எப்போது தொடங்கப்படும்? என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு மே மாதத்தில் 5 புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய 3 மோட்டார்சைக்கிள்களை ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மே 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

இந்த 3 மோட்டார்சைக்கிள்கள் தவிர ப்ளஷர் ப்ளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களை, கடந்த மே 13ம் தேதியன்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆக மொத்தத்தில் 3 மோட்டார்சைக்கிள்கள், 2 ஸ்கூட்டர்கள் என 5 புதிய தயாரிப்புகள் களமிறக்கப்பட்டுள்ளன.

3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

இந்த புதிய மாடல்களுக்கான முன்பதிவுகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் டெலிவரி இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த சூழலில், இந்த 5 மாடல்களின் டெலிவரி பணிகளும் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய மாடல்களின் விலை முறையே ரூ.97,000, ரூ.94,000 மற்றும் 98,500 ரூபாயில் இருந்து தொடங்குகின்றன. அதே சமயம் எக்ஸ்பல்ஸ் 200 ப்யூயல் இன்ஜெக்ஸன் வேரியண்ட்டின் விலை 1.05 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

அதேநேரத்தில் ஹீரோ ப்ளஷர் ப்ளஸ் ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 47,300 ரூபாய். டாப் வேரியண்ட்டின் விலை 49,300 ரூபாய். மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் விலை 58,500 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது ட்ரம் வேரியண்ட்டிற்கான விலையாகும். இதன் கார்புரேட்டர் மற்றும் டிஸ்க் வேரியண்ட்டின் விலை 60,000 ரூபாய். அதே சமயம் டாப் எண்ட் ப்யூயல் இன்ஜெக்ஸன் வேரியண்ட்டின் விலை 62,700 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

இதில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடலானது, ஆஃப் ரோடு சார்ந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். ட்யூயல் பர்பஸ் டயர்களை இது பெற்றுள்ளது. இதன் முன் பகுதியில் 21 இன்ச் சக்கரமும், பின் பகுதியில் 18 இன்ச் சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எக்ஸ்பல்ஸ் 200டி மாடலில், சிறிய 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தனது சஸ்பென்ஸன் செட்அப்பை எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

மறுபக்கம் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலானது, எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலின் ஃபுல்லி ஃபேர்டு வேரியண்ட் ஆகும். இந்த மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களிலும், 200 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 18.4 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

அதே நேரத்தில் ஹீரோ ப்ளஷர் ப்ளஸ் மாடலானது குறிப்பிடத்தகுந்த காஸ்மெட்டிக் அப்டேட்டை பெற்றுள்ளது. அத்துடன் புதிய மற்றும் சக்தி வாய்ந்த 110 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜினையும் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவர் மற்றும் 8.7 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்?

அதே சமயம் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125தான், இந்தியாவின் முதல் ப்யூயல் இன்ஜெக்ஸன் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின்தான் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

Most Read Articles
English summary
Hero Xpulse 200, Xpulse 200T, Xtreme 200S, Pleasure plus, Maestro Edge 125 Delivery Details. Read in Tamil
Story first published: Tuesday, May 28, 2019, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X