பிரத்யேகமான வடிவமைப்பில் சாகச பிரியர்களுக்காக களமிறங்கும் ஹோண்டாவின் புதிய மாடல் பைக்...!

ஹோண்டா நிறுவனம் தனது 2019 ஆப்பிரிக்கா ட்வின் என்ற மாடலை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் குறித்த மேலும் சில தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரத்யேகமான வடிவமைப்பில் சாகச பிரியர்களுக்காக களமிறங்கும் ஹோண்டாவின் புதிய மாடல்...!

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், தனது புத்தம் புதிய பிரீமியம் ரக அட்வென்சர் மோட்டர்சைக்கிளான 2019 ஆப்பிரிக்கா ட்வின் என்ற மாடலை இந்தியாவில் விற்பனைக்காக இன்று அறிமுகம் செய்தது. இந்த புத்தம் புதிய மாடலை ஹோண்டாவின் விங் டீலர்கள் மூலம் விற்பனைச் செய்ய இருப்பதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரத்யேகமான வடிவமைப்பில் சாகச பிரியர்களுக்காக களமிறங்கும் ஹோண்டாவின் புதிய மாடல்...!

நாட்டில் மொத்தம் 22 ஹோண்டா விங் டீலர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த மாடலில் வெறும் 50 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விற்பனையைத் தொடர்ந்தே, இந்த மாடல் மீதான உற்பத்தி அதிகரிக்கப்படும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலையானது இந்திய மதிப்பில் ரூ. 13.5 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

பிரத்யேகமான வடிவமைப்பில் சாகச பிரியர்களுக்காக களமிறங்கும் ஹோண்டாவின் புதிய மாடல்...!

ஹோண்டா நிறுவனத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் இந்த புத்தம் புதிய மாடல் ஆப்பிரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள், முழுக்க முழுக்க சாகச பயணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மோட்டார்சைக்கிள் நீண்ட தூரம் செல்லுவதற்கு ஏற்றதாகவும், காடு மற்றும் மலைப் பகுதியில் தங்கு தடையின்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரத்யேகமான வடிவமைப்பில் சாகச பிரியர்களுக்காக களமிறங்கும் ஹோண்டாவின் புதிய மாடல்...!

இந்த மோட்டார் சைக்கிளானது, தக்கர் ரேலியின் வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த மோட்டார்சைக்கிளில் சில சிறப்பம்சங்களைக் இந்த ஆப்பிரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. மேலும், இதில் கேட்ரிட்ஜ் வகையிலான இன்வெர்டட் முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் இரு வீல்களிலும் ப்ரீ லோட் அட்ஜஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

பிரத்யேகமான வடிவமைப்பில் சாகச பிரியர்களுக்காக களமிறங்கும் ஹோண்டாவின் புதிய மாடல்...!

இதையடுத்து, எந்த சாலையிலும் பயணிக்குமாறு மிருதுவான மற்றும் கடினத்தன்மைக் கொண்ட டயர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இது பயண வாகன ஓட்டியின் சௌகரியமான அனுபவத்திற்கு உதவும். இதேபோன்று, இந்த மோட்டார்சைக்கிளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரத்யேகமான வடிவமைப்பில் சாகச பிரியர்களுக்காக களமிறங்கும் ஹோண்டாவின் புதிய மாடல்...!

இந்த புதிய அட்வென்சர் மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தைத் தொடர்ந்து, ஹோண்டா நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறையின் மூத்த துணைத் தலைவர் திரு. யாத்வீந்தர் சிங் குலீரியா கூறியதாவது,

"2017இல் இருந்தே ஆப்பிரிக்கா ட்வின் மீதான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தியாவில் உள்ள சாகச விரும்பிகளுக்காகவே, பிரத்யேகமா இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு அலாதியான சாகச அனுபவத்தை வழங்கும். இதன் புதுமையான தோற்றம் உங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற எண்ணைத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது" என்றார்.

பிரத்யேகமான வடிவமைப்பில் சாகச பிரியர்களுக்காக களமிறங்கும் ஹோண்டாவின் புதிய மாடல்...!

ஹோண்டா 2019 ஆப்பிரிக்கா ட்வின் மோட்டார் சைக்கிளில் 999.1 பேரல்லல் ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 87.7 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 93.1 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்-இல் வழங்கும் திறன் கொண்டது. இதன் டிரான்மிஸ்ஸனானது இரண்டாம் தலைமுறை டுயூவல் கிளட்ச் ஆட்டேமேடிக் கியர்பாக்ஸ் மூலம் இயங்குகிறது.

பிரத்யேகமான வடிவமைப்பில் சாகச பிரியர்களுக்காக களமிறங்கும் ஹோண்டாவின் புதிய மாடல்...!

மேலும், இந்த பைக்கில் பாதுகாப்பு அம்சமாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 232 கிலோவாக இருக்கிறது. இதன் முன்பக்க வீல் 21 இன்சைக் கொணட்தாகவும், பின்பக்க வீல் 18 இன்சைக் கொண்டதாகவும் இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 250 மிமீ. இந்த மோட்டார் சைக்கிள் டிரையம்ப் டைகர் 800, சுஸுகி வி-ஸ்டார்ம் மற்றும் கவாஸகி வெர்சிஸ் 1000 ஆகிய மோட்டார்சைக்கிளுடன் போட்டியிடும்.

Most Read Articles
English summary
Honda 2019 Africa Twin Booking Open In India. Read In Tamil.
Story first published: Wednesday, April 3, 2019, 15:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X