புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்!

ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரத்தையும், இதன் சிறப்பம்சங்களையும் பார்த்துவிடலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்!

இந்தியர்களின் மனம் விரும்பிய ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 110 மற்றும் 125 சிசி மாடல்களில் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் வர இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக புதிய ஹோண்டா ஆக்டிவா 125 மாடல் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்!

ஹோண்டா நிறுவனத்தின் முதல் பிஎஸ்-6 மாடலாக வர இருக்கும் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் இந்த புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் முறைப்படி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்!

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் எஞ்சின் கடுமையான புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய பிஎஸ்-4 மாடலில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்!

இந்த ஸ்கூட்டரில் நவீன தொழில்நுட்பத்திலான ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் ஹோண்டாவின் ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இதனால், உராய்வுகள் குறைவான உதிரிபாகங்கள் மூலமாக அதிர்வுகள் குறைந்திருக்கும் என்பதுடன் எரிபொருளை அதிகபட்சம் எரிக்கும் நுட்பத்தை பெற்றிருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்!

கார்களில் வழங்கப்படுவது போன்ற நிகழ்நேர எரிபொருள் செலவு, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பது போன்ற புதிய வசதிகளும் இடம்பெற இருக்கிறது. புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இடம்பெற இருக்கும் புதிய ஏசி ஜெனரேட்டரானது சப்தமில்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் சிறப்பம்சத்துடன் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்!

எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பக்கவாட்டு பேனல்களில் க்ரோம் பட்டை அலங்காரம், புதிய டெயில் லைட்டுகள் என்பதுடன் பரிமாணத்திலும் சற்றே பெரிய ஸ்கூட்டர் மாடலாக புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹோண்டா ாக்டிவா ஸ்கூட்டர் ரெபெல் ரெட் மெட்டாலிக், பிளாக் ஹெவி க்ரே மெட்டாலிக், மிட்நைட் புளூ மெட்டாலிக், பியர்ல் பிரிசியஸ் ஒயிட் மற்றும் மெஜெஸ்டிக் பிரவுன் மெட்டாலிக் உள்ளிட்ட புதிய வண்ணத் தேர்வுகளிலும் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் தோற்றத்திலும், மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் வர இருப்பதால் வாடிக்கையாளர் ஆவலை கிளறியுள்ளது. சுஸுகி அக்செஸ் 125 உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Honda 2 Wheelers has revealed Activa BS6 model to be launched in India on sep 11, 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X