புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கியது!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி நாடு முழுவதும் துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கியது!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 126 ஸ்கூட்டர் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடல் ஸ்டான்டர்டு, அலாய் மற்றும் டீலக்ஸ் என மூன்று விதமான வேரியண்ட்டுகளில் வந்தது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கியது!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் ஸ்டான்டர்டு வேரியண்ட் ரூ.67,490 விலையிலும், அலாய் வீல் வேரியண்ட் ரூ.70,990 விலையிலும், டீலக்ஸ் வேரியண்ட ரூ.74,490 எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலுக்கான டெலிவிரி கொடுக்கும் பணிகள் நாட்டிலுள்ள அனைத்து ஹோண்டா டீலர்களிலும் துவங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கியது!

புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் 124 சிசி எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரையும், 8.52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய மாடலைவிட 13 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை இந்த ஸ்கூட்டர் வழங்கும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கியது!

புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் புதிய செல்ஃப் ஸ்டார்ட் மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது அதிர்வுகள் மற்றும் சப்தம் இல்லாமல் ஸ்கூட்டர் எஞ்சினை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கியது!

புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம் உள்ளிட்ட 26 வகையான காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. டீலக்ஸ் வேரியண்ட்டில் எல்இடி ஹெ்லைட்டுகளும், சாதாரண வேரியண்ட்டுகளில் ஹாலஜன் பல்புகள் கொண்ட ஹெட்லைட்டும் உள்ளன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கியது!

அனலாக் மற்றும் டிஜிட்டல் திரையுடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்திலேயே பெட்ரோல் நிரப்புவதற்கான மூடி இடம்பெற்றிருப்பதும், டியூவல் ஃபங்ஷன் சாவியும் இதன் முக்கிய அம்மசங்களாக உள்ளன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கியது!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரில் 5.3 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இந்த ஸ்கூட்டர் 111 கிலோ எடை கொண்டது. முன்புறத்தில் 90/90 - 12 அளவுடைய டயரும், பின்புறத்தில் 90/100 - 10 டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கியது!

டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 3 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. முன்சக்கரத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Honda Motorcyclels and Scooters India Limited, has commenced nationwide deliveries of the new Activa 125 BS-VI model from yesterday.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X