புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. படங்களையும், கூடுதல் தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

இந்திய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தலைசிறந்த மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்தடுத்து வரும் புதிய மாடல்களின் வரவை சமாளிக்கும் விதத்தில், அவ்வப்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் புதிய மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அடையாளங்கள் மறைக்கப்பட்டு சாலை சோதனையில் இருந்து வரும் புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் மோட்டார்பீம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

ஒட்டுமொத்த டிசைனில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பது தெரிகிறது. ஆனால், முந்தைய மாடல்களிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் பாடி டீக்கெல் ஸ்டிக்கர் மற்றும் வண்ணங்களில் மாறுதல்கள் இருக்கும். ஹெட்லைட்டில் பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் புதிய டிசைனிலான ஃபென்டர், பின்புறத்தில் புதிய கைப்பிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருப்பது தெரிகிறது. க்ரோம் வளையம் மூலமாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சினை அணைப்பதற்கான கில் சுவிட்ச் இடம்பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், புதிய அலாய் வீல்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர எஞ்சினும் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 109 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் தக்கவைக்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

எனினும், தற்போது உள்ள பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சம் கொண்ட எஞ்சின், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. மேலும், புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக் வசதியும் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் கூடிய விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. டிவிஎஸ் ஜுபிடர், ஹீரோ மேஸ்ட்ரோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Honda Motorcycles & Scooters India is said to be testing out their new Activa scooter for the market. The new Honda Activa 6G has been spied testing for the first time. Spy pics of the new Activa scooter can be seen with the model, completely camouflaged.
Story first published: Wednesday, March 20, 2019, 15:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X