அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா நிறுவனம் தனது பைக்குகளுக்கு வழங்கிவரும் சலுகைகளை 2019ஆம் ஆண்டின் கடைசி மாதமான இந்த டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா நிறுவனம் தனது பைக்குகளின் விற்பனையை இந்திய சந்தையில் தொடர்ந்து முன்னிலைப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியான பண்டிக்கை கால சலுகைகளை அறிவித்திருந்தது.

அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

இந்த சலுகைகள் பண்டிக்கை காலம் முடிந்த பின்னரும் சில மாதங்களுக்கு தொடரும் என்றும் அப்போதே கூறியிருந்தது. இத்திட்டத்திற்கு ஹோண்டா ஜாய் கிளப் என பெயர் வைத்துள்ள இந்நிறுவனம் இந்த க்ளப்பின் மூலம் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாக இணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.

அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

அதன்படி 2019ஆம் ஆண்டின் இந்த கடைசி டிசம்பர் மாதத்திற்கும் சலுகைகள் தொடர்கின்றன. இந்த சலுகையில் பணம் தள்ளுபடி அனைத்து மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஹோண்டா நிறுவனத்தின் பிரபல பைக் மாடல்களை வாங்குவதன் மூலம் ரூ.9,500 வரை பணத்தை சேமிக்க முடியும்.

அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

அதேபோல் முன் பணமாக ரூ.1,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் சிபிஆர்250ஆர், சிபி ஷைன் மாடல்கள், லிவோ, சிபி ஹார்னெட் 160 ஆர், சிபி யூனிகார்ன், எக்ஸ்-ப்ளேட் மற்றும் ட்ரீம் சீரிஸ் பைக்குகள் இந்த சலுகையின் கீழ் அடங்குகின்றன.

அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஸ்கூட்டர் பிரிவில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்டிவா 125 எஃப்ஐ, ஆக்டிவா 5ஜி, டியோ, கிரேஸியா மற்றும் கிளிக் போன்ற மாடல்களுக்கு இந்த சலுகையை வழங்கியுள்ளது. இத்துடன் பங்கி மற்றும் குயிர்கி நவி பைக்குகளையும் இந்நிறுவனம் இந்த வரிசையில் சேர்த்துள்ளது.

Most Read:செம்ம.. யமஹா ஸ்கூட்டர் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. ஆர்15 மாடலை தழுவி உருவாகும் ஸ்பெஷல் ஸ்கூட்டர்!

அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ள இந்த சலுகையில் அதிகமாக விற்பனை சரிவை கண்டுவரும் பைக்குகள் தான் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் கடந்த மாதத்தில் இந்தியாவில் வெறும் 8 பைக்குகள் தான் விற்பனையாகி இருந்தது. இதுகுறித்த முழுமையான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

Most Read:வெறும் 8 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகள் மட்டுமே அக்டோபரில் விற்பனை... அதிர்ச்சியில் ஹோண்டா...

அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

பணம் தள்ளுபடி, குறைந்த மாத தவணைகளுடன் ரூ.7,000 மதிப்புள்ள பேடிஎம் கேஷ்பேக்கையும் இந்த சலுகையும் மூலம் வழங்குகிறது. அதாவது மேற்கூறப்பட்டுள்ள மோட்டார்சைக்கிள்களை வாங்குவதன் கிடைக்கும் இந்த 7,000 ரூபாய் பேடிஎம் கேஷ்பேக்கை பேருந்து, திரைப்படம் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.

அபுதாபி போலீசார் அடுத்ததாக வாங்கியுள்ள சூப்பர் பைக் எதுவென்று தெரியுமா?

அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...

மேலும் ஹோண்டாவின் இந்த சலுகைகள் இந்தியா முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் அடுத்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரையில் மட்டும் தான் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோண்டா நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை வாங்க இதுவே சரியான நேரம்.

Most Read Articles

English summary
Honda Activa and CB Shine available at attractive offers; other models as well
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X