புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

ஹோண்டா நியூ ஸ்போர்ட்ஸ் கஃபே கான்செப்ட்டின் டிசைன் தாத்பரியங்களுடன் உருவாக்கப்பட்ட சிபி300ஆர் என்ற புத்தம் புதிய பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா நிறுவனம்.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

கடந்த 2017ம் ஆண்டு டோக்கியோ ஆட்டோ எக்ஸ்போவில் நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே என்ற பைக் கான்செப்ட் மாடைல ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த அந்த பைக் பவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பைக்கில் 998சிசி 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த நிலையில், ஹோண்டா நியூ ஸ்போர்ட்ஸ் கஃபே கான்செப்ட்டின் டிசைன் தாத்பரியங்களுடன் உருவாக்கப்பட்ட சிபி300ஆர் என்ற புத்தம் புதிய பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா நிறுவனம்.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

மேலும், இந்த புதிய பைக் மாடலுக்கு நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட ஹோண்டா மோட்டார்சைக்கிள் டீலர்களில் முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.5,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு முன்பதிவு ஏற்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் எல்இடி விளக்குகள் கொண்ட வட்ட வடிவிலான ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி இன்டிகேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குதிரை குளம்பு வடிவிலான கெய்டு லைட்டுகளும் ஹெட்லைட்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 286சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 31 பிஎஸ் பவரையும், 27.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் டியூபியூலர் மற்றும் அழுத்தப்பட்ட ஸ்டீல் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 41 மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் பிரேக்கும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

மேலும், பைக்கின் நிலைத்தன்மை குறித்து அளவிட்டு கூறும் ஐஎம்யூ சாதனம் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸட்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கானது மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் கேண்டி க்ரோமோஸ்பியர் ரெட் என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் ரூ.2.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விலை அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்!

விலை அறிவிப்பு வந்தவுடன் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும். முக்கிய உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. கேடிஎம் 390 ட்யூக், பஜாஜ் டோமினார் 400 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Honda Motorcycle & Scooters India (HMSI) has confirmed the launch of their Neo Sports cafe inspired CB300R for the Indian market. The Honda CB300R will be available in India as a completely Knocked Down (CKD) kit and is expected to be priced below Rs 2.5 lakh, ex-showroom.
Story first published: Wednesday, January 16, 2019, 11:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X