ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!

அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், காத்திருப்பு காலம் ஓர் ஆண்டு வரை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!

கடந்த ஜனவரி மாதம் ஹோண்டா சிபி300ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் லாட்டில் 500 பைக்குகள் மட்டும் இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, முதல் லாட் என்பது முதல் ஓர் ஆண்டிற்கான யூனிட்டுகளாக தெரிவிக்கப்பட்டது.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!

இந்த நிலையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனமே எதிர்பார்க்காத வகையில், புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு கிடைத்துள்ளது. முதல் ஒரு மாதத்திலேயே 400 யூனிட்டுகளுக்கான முன்பதிவு முடிந்த நிலையில், தற்போது முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 யூனிட்டுகளுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டதாம்.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!

தற்போது முதல் லாட்டில் முன்பதிவு செய்தவர்கள் இந்த பைக்கை டெலிவிரி பெறுவதற்கு அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், தொடர்ந்து முன்பதிவு பெறப்படுகிறது.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!

இப்படி இரண்டாவது லாட்டிற்கு முன்பதிவு செய்பவர்களுக்கு, காத்திருப்பு காலம் ஓர் ஆண்டு வரை நீள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கை டெலிவிரி பெறுவதற்கு ஓர் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!

இதனிடையே, தாய்லாந்தில் இருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே, வரவேற்பை கருத்தில்கொண்டு கூடுதல் யூனிட்டுகளை விரைவாக ஒதுக்கீடு செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் மற்றும் டீலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!

ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் டிசைன் மிகவும் தனித்துவமானது. பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களை கலந்து கட்டி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 286சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறு.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 27.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியடாம்!

இந்த பைக் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் கேண்டி க்ரோமோபியர் என இரண்டு வண்ணங்களில் கிடைடக்கிறது. ரூ.2.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Honda CB300R sportsbike First Lot SOLD out for India.
Story first published: Friday, April 19, 2019, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X