இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் மாடலின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் (Honda CBR650R) மோட்டார்சைக்கிள் மாடல் இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

புதிய சிபிஆர்650ஆர் மாடலுக்கான புக்கிங்கை ஹோண்டா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. சுமார் 3 மாத கால காத்திருப்பிற்கு பின், சிபிஆர்650ஆர் மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ஹோண்டா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் மாடலில், 649 சிசி, லிக்யூட் கூல்டு, 4-சிலிண்டர், டிஓஎச்சி 16-வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 11,500 ஆர்பிஎம்மில் 88.4 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 60.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. பழைய மாடலை காட்டிலும், புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் மாடல் சேஸிஸின் எடை 6 கிலோகிராம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலில் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

அத்துடன் ஹோண்டாவின் செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் சிஸ்டமும் ( STCS-Selectable Torque Control System), புதிய சிபிஆர்650ஆர் மாடலில் இடம்பெற்றுள்ளது. பைக்கின் பின் சக்கரத்தை ''ஸ்பின்னிங்கில்'' இருந்து இது பாதுகாக்கிறது.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

அத்துடன் கடினமான நேரங்களில், பைக்கின் கட்டுப்பாட்டை பராமரிக்கவும் இது உதவி செய்கிறது. ஆனால் அதிக அனுபவம் வாய்ந்த ரைடர்கள் எஸ்டிசிஎஸ் சிஸ்டத்தை ஆஃப் செய்து கொள்ள முடியும். இதில், பாதுகாப்பிற்காக ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் கன்பவுடர் ப்ளாக் மெட்டாலிக் என மொத்தம் 2 கலர் ஆப்ஷன்களில் புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் மாடல் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள வழக்கமான ஹோண்டா டீலர்ஷிப்களில், சிபிஆர்650ஆர் மோட்டார்சைக்கிள் கிடைக்காது.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் இந்தியா முழுக்க 22 பிரீமியம் டீலர்ஷிப்களை அமைத்துள்ளது. இவை ''விங் வேர்ல்டு'' (Wing World) என அழைக்கப்படுகின்றன. இந்த 22 விங் வேர்ல்டு டீலர்ஷிப்கள் மூலமாகவே ஹோண்டா நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

இதன்படி புதிய சிபிஆர்650ஆர் மாடலும், விங் வேர்ல்டு டீலர்ஷிப்கள் வாயிலாகவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் என பார்த்தால் மொத்தம் 2 விங் வேர்ல்டு டீலர்ஷிப்கள் மட்டுமே உள்ளன. இதில், ஒன்று சென்னையிலும், மற்றொன்று கோவையிலும் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஹோண்டா பைக் தமிழகத்தில் 2 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

புதிய ஹோண்டா சிபிஆர்650ஆர் மோட்டார்சைக்கிள், 7.70 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். கவாஸாகி இஸட்900, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்750 உள்ளிட்ட மாடல்களுடன் ஹோண்டா சிபிஆர்650ஆர் போட்டியிடுகிறது.

Source: Team Lords

Most Read Articles
English summary
Honda CBR650R Deliveries Begin In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X