சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

ஹோண்டாவின் இரு பிரபலமான ஸ்கூட்டர்கள் சந்தையை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஸ்கூட்டர்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

இந்திய வாகன சந்தை அண்மைக் காலங்களாக பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றது. அதிலும், மிக முக்கியமாக விற்பனைச் சரிவு, மந்த நிலை உள்ளிட்டவற்றால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் நெருக்கடியை அடைந்துள்ளன.

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில், ஓர் காரணமாக இருப்பதுதான் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி. இது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வரவிருக்கின்றது.

சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

இந்த புதிய விதி அமலுக்கு வரவிருப்பது பல் முன்னணி நிறுவனங்களின், முக்கியமான மாடல்களுக்கு பெரும் தலை வலியாக மாறியுள்ளது.

ஏனென்றால், புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப தற்போதைய வாகனங்களை அப்கிரேட் செய்வது, அதிக செலவீணத்தை ஏற்படுத்தும்.

சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

ஆகையால், பல வாகனங்கள் இந்த புதியை சந்திக்க முடியாமல், சந்தையை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த வரிசையில், ஹோண்டா நிறுவனத்தின் இரு முன்னணி மாடல்கள் இணைய இருக்கின்றது.

அந்தவகையில், ஹோண்டா நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்கூட்டர்களான க்ளிக் மற்றும் நவி ஆகிய இரு மாடல்களும் சந்தையை விட்டு வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

அதேசமயம், இந்த இரு ஸ்கூட்டர்களை சந்தையை விட்டு வெளியேற்ற மற்றொரு முக்கிய காரணமும் இருக்கின்றது. இவ்விரு ஸ்கூட்டர்களும் கடந்த காலங்களில் சரிவர விற்பனை விகதித்தைப் பெறவில்லை. தெளிவாக கூற வேண்டுமானால், கடந்த ஜுலை மாத விற்பனையின்படி, நவி மற்றும் க்ளிக் ஸ்கூட்டர்களின் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.

சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

ஆகையால், இந்த ஸ்கூட்டர்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிக்கு அப்கிரேட் செய்வது எந்தவித பலனும் அளிக்காத என்ற நோக்கில், ஹோண்டா நிறுவனம் இவற்றை சந்தையைவிட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த பூஜ்ஜியம் யூனிட் விற்பனைகுறித்த தகவலை ஹோண்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.

சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

ஹோண்டா கிளிக் மற்றும் நவி, ஆகிய இரண்டும் வழக்கத்திற்கு மாறான மற்றும் வேறுபட்ட தயாரிப்புகளாக அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், அவை இரண்டும் மிக மோசமான முடிவை வழங்கியிருக்கின்றது. மேலும், அந்நிறுவனம் நிர்ணயித்த இலக்கைகூட எட்ட முடியாமல் படும் தோல்வியுற்ற மாடலாக அவை மாறியுள்ளன. இதற்கு, முக்கிய காரணம் இந்த ஸ்கூட்டர்கள் செயல்திறன் மாடலாக இருப்பதாகும்.

சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

இதில், நவி ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 45,300 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. இளைஞர்களைக் கவரும் விதமாக களமிறக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், பிரபலமடையாமல் தோல்வியைச் சந்தித்தது. கடந்த சில மாதங்களாக இதே சூழல்தான் நிலவி வருகின்றது.

சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

இதேபோன்று, ஹோண்டா க்ளிக் மாடலும் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகின்றது. ஒரு சில மாதங்களில் இது 200க்கும் குறைவான யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இந்த ஸ்கூட்டர் ஹோண்டாவின் மிகவும் பிரபல மாடலான ஆக்டிவாவைக் காட்டிலும் 10,000 ரூபாய் குறைவான விலையைக் கொண்டு களமிறக்கப்பட்டது. இருப்பினும், சரியான விற்பனை விகிதத்தைப் பெறவில்லை.

சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்!

மேற்கூறியதைப் போன்ற பல்வேறு காரணங்களால், ஹோண்டாவின் நவி மற்றும் க்ளிக் ஸ்கூட்டர்கள் சந்தையை விட்டு வெளியேற்றப்பட உள்ளன. இதுமட்டுமின்றி, பல முன்னணி நிறுவனங்களின் பிஎஸ்-6 உமிழ்வு விதையைச் சந்திக்க முடியாமல் சந்தையைவிட்டு வெளியேறி வருகின்றன.

Most Read Articles
English summary
Honda Cliq & Navi Scooters Likely Discontinued. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X