சிபிஎஸ் பிரேக்குடன் ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகள் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிபிஎஸ் பிரேக்குடன் ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகள் அறிமுகம்!

வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் பைக்குகளில் அதிக பாதுகாப்பை தரும் பிரேக் சிஸ்டம் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 125சிசி வரையிலான இருசக்கர வாகனங்களில் சிபிஎஸ் பிரேக் சிஸ்டமும், அதற்கு மேலான சிசி திறன் கொண்ட மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட வேண்டும்.

சிபிஎஸ் பிரேக்குடன் ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகள் அறிமுகம்!

இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களில் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகளில் சிபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை பொருத்தி அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா ட்ரீம் யுகா பைக் சிபிஎஸ் ஒரு வேரியண்ட்டிலும், லிவோ சிபிஎஸ் மாடலானது டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் கொண்ட இரண்டு வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

சிபிஎஸ் பிரேக்குடன் ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகள் அறிமுகம்!

புதிய ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகளில் புதிய பிரேக் சிஸ்டத்தை தவிர்த்து, பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த பைக்கின் பாடி டீக்கெல் ஸ்டிக்கர் மற்றும் வண்ணத் தேர்வுகளில் மாற்றங்கள் இள்லை.

MOST READ:மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கூபே காரின் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

சிபிஎஸ் பிரேக்குடன் ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகள் அறிமுகம்!

புதிய ட்ரீம் யுகா பைக்கில் பாடி கலரிலான சைடு மிரர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் ரோலிங் ரெசிஸ்டென்ஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் என்று ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த இரண்டு பைக்குகளிலும் 109.19 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 8.4 பிஎச்பி பவரையும், 9.09 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சிபிஎஸ் பிரேக்குடன் ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகள் அறிமுகம்!

எஞ்சின் மட்டுமின்றி, சேஸீ மற்றும் சஸ்பென்ஷனும் இரண்டு பைக்குகளிலும் ஒன்றுதான். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஸ்பிரிங் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது.

MOST READ:ரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

சிபிஎஸ் பிரேக்குடன் ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோ பைக்குகள் அறிமுகம்!

ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கின் சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் மாடலுக்கு ரூ.54,847 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட ரூ.600 கூடுதல் விலையில் வந்துள்ளளது. ஹோண்டா லிவோ பைக்கின் டிரம் சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் மாடலுக்கு ரூ.57,539 எக்ஸ்ஷோரூம் விலையாகவும், டிஸ்க் சிபிஎஸ் மாடலுக்கு ரூ.59,950 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Tamil
English summary
Honda has upgraded the its Dream Yuga and Livo commuter motorcycles with CBS (Combined-Braking System). We recently reported about the Honda CD 110 Dream receiving the feature update, and now it's the turn of the other two motorcycles to be upgraded, completing Honda's 110cc motorcycle line-up.
Story first published: Friday, March 15, 2019, 14:55 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more