ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

பிரம்மாண்டமான தோற்றத்துடன் சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல்கள் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானவை. இதே ரகத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 22 - கிம்கோ மோட்டார் நிறுவனம் எக்ஸ்-டவுன் என்ற 300சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை மனதில் கொண்டு, ஹோண்டா நிறுவனமும் மேக்ஸி ரக ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனது சந்தையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள தனது ஃபோர்ஸா 300 என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலை முதலாவதாக இந்தியாவில் களமிறக்குவதற்கு ஹோண்டா முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஸிக்வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

தற்போது தனது தாயகமான ஜப்பானிலும், ஆசிய நாடுகளிலும் ஹோண்டா ஃபோர்ஸா 300 ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கிறது. சிறப்பான ஏரோடைனமிக் தத்துவத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் முகப்பில் பிரம்மாண்ட அப்ரான் பகுதி முரட்டுத்தனமாக தெரிகிறது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

எல்இடி ஹெட்லைட்டுகள், அகலமான இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் விண்ட்ஸ்கிரீன் கண்ணாடி அமைப்பு, அனலாக் மற்றும் எல்சிடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகிய அம்சங்களை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 300 ஸ்கூட்டரில் 2 ஹெல்மெட்டுகளை வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதி, 12V சார்ஜர் சாக்கெட், ஸ்மார்ட் கீ சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. கால்களை வைப்பதற்கு வசதியான ஃபுட்ரெஸ்ட் அமைப்பபை பெற்றுள்ளது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் 15 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 14 அங்குல சக்கரமும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 120/70 டயரும், பின்சக்கரத்தில் 140/70 டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 300 ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரண்டு ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 259 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 300 ஸ்கூட்டரில் 279 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎஸ் பவரையும், 27.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 31 கிமீ மைலேஜ் தர வல்லதாக தெரிவிக்கப்படுகிறது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

இந்த ஸ்கூட்டரில் வேரியபிள் வால்வு டைமிங் தொழில்நுட்த்துடன் கூடிய எஞ்சின் ஆரம்ப, நடுத்தர மற்றும் அதிக வேகத்தில் சிறப்பான செயல்திறனை அளிக்க வல்லதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

ஹோண்டாவின் விசேஷமான செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டமும் இதில் இருக்கிறது. இதனால், இந்த ஸ்கூட்டர் அதிக தரைப்பிடிப்புடன், எஞ்சின் சக்தியை பின்சக்கரத்திற்கு சரியான அளவில் செலுத்தப்படுவதால் பின்சக்கரம் சறுக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

புதிய ஹோண்டா ஃபோர்ஸா 300 ஸ்கூட்டர் மாடலானது பிக்விங் என்ற பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். மேலும், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதால், ரூ.7 லட்சம் விலையில் வர இருக்கிறதாம்.

ரூ.7 லட்சம் விலையில் புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா?

அண்மையில் வந்த 22 கிம்கோ எக்ஸ்-டவுன்300 ஸ்கூட்டர் ரூ.2.30 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இணையாக கருதப்படும் இந்த 300 சிசி மேக்ஸி ஸ்கூட்டர் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Zigwheels

Most Read Articles

English summary
According to media reports, Honda is planning to launch its Forza 300 maxi style scooter in India by the end of this year.
Story first published: Tuesday, July 23, 2019, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X