புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் பியர்ல் சைரன் புளூ என்ற புதிய வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. முன்புற அப்ரான் பகுதியில் டிஎக்ஸ் என்ற வேரியண்ட் பெயரை குறிக்கும் ஸ்டிக்கர் இடம்பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை பார்க்கலாம்.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

2019 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரின் விலை உயர்ந்த DX டாப் வேரியண்ட்டில் மட்டுமே கூடுதல் அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் பியர்ல் சைரன் புளூ என்ற புதிய வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. முன்புற அப்ரான் பகுதியில் டிஎக்ஸ் என்ற வேரியண்ட் பெயரை குறிக்கும் ஸ்டிக்கர் இடம்பெற்றுள்ளது. மேலும், புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த மாற்றங்களும் இல்லை. பழைய டிஎக்ஸ் வேரியண்ட்டைவிட விலையில் ரூ.300 அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய டிஎக்ஸ் வேரியண்ட் ரூ.64,668 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் 124.9சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த ஸ்கூட்டரில் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. முன்சக்கரத்திற்கான 190 மிமீ டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் இந்த ஸ்கூட்டரில் உள்ளது.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஸ்பிரிங் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும் உள்ளது. இரண்டு சக்கரங்களிலும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 90/90 R12 அளவுடைய டயரும், பின்சக்கரத்தில் 90/100 R10 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 18 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதி, முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்பீடு இன்டிகேட்டர், க்ளவ் பாக்ஸ், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் 4-1 லாக் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. டிரம் மற்றும் சாதாரண சக்கரங்கள் பொருத்தப்பட்ட மாடல் ரூ.60,296 விலையிலும், டிரம் பிரேக் மற்றும் அலாய் சக்கரங்கள் கொண்ட மாடல் ரூ.62,227 என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

புதிய ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிவிஎஸ் என்டார்க் 125, சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட், சுஸுகி அக்செஸ் 125 மற்றும் அப்ரிலியா எஸ்ஆர் 125 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
2019 Honda Grazia launched in India. Honda Motorcycles and Scooters India (HMSI) has introduced the 2019 version of their popular 125cc scooter, the Grazia in the Indian market. The update however, is limited to only the top variant of the scooter while the base variants remain unchanged.
Story first published: Monday, March 11, 2019, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X