ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

ஹோண்டா நிறுவனம், அதன் லிமிடெட் எடிசன் 2019 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்குறித்த சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

ஹோண்டாவின் தயாரிப்புகளாக வெளிவரும் ஸ்கூட்டர்களில், அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஆக்டிவா இருந்து வருகின்றது. இந்த ஸ்கூட்டரின் விற்பனையை முறியடிக்கும் விதமாக பல்வேறு ஸ்கூட்டர்கள் சந்தையில் களமிறக்கப்பட்டாலும், அவற்றால் அதற்கு ஈடுகொடுக்க முடிவதில்லை. அத்தகைய புகழ்வாய்ந்த மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

ஆனால், இத்தகைய ஸ்கூட்டரின் விற்பனை அண்மைக் காலங்களாக சரிவைச் சந்தித்து வருகின்றது. ஆகையால், 2019 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, ஹோண்டா நிறுவனம், அதன் ஸ்பெஷல் எடிசன் மாடலை இந்தியாவில் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர், ஸ்பெஷலான வண்ணம் மற்றும் புதிய சிறப்பம்சங்களை உள்ளடக்கியவையாக களமிறக்கப்பட்டது.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

அதேசமயம், இதன் விலை தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்டாண்டர்டு வேரியண்டைக் காட்டிலும், அது ரூ. 400 மட்டுமே அதிகம் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர் இரண்டு விதமான வண்ணத் தேர்வில் ட்யூவல் டோன் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

அவ்வாறு, பியர்ல் ப்ரீசியஸ் வெண்மை நிறத்தினாலான மேட் செலினே சில்வர் மற்றும் ஸ்ட்ரோன்டியம் சில்வர் மெட்டாலிக் நிறத்துடன கூடிய இக்னியூஸ் கருப்பு ஆகிய இரு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இத்துடன், இந்த லிமிடெட் எடிசனை கூடுதல் பிரிமியம் லுக்கில் காட்டுவதற்காக, ஸ்கூட்டருக்கு குரோம் கார்னிஷ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குரோம் மெட்டல் மஃப்ளர் கவர், மறு வேலைபாடு செய்யப்பட்ட இருக்கை, புதிய பக்கவாட்டு பேனல்கள் மற்றும் முன்பக்க மட்குவார்ட் ஃபெண்டரில் முற்கலைப் போன்ற கோடுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

இத்தகைய, பல்வேறு சிறப்பம்சங்கள் ஹோண்டாவின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், அதனை விளம்பரம்படுத்தும் வகையில், ஹோண்டா நிறுவனம் லிமிடெட் எடிசன் 2019 ஆக்டிவாகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், ஆக்டிவா ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்பெஷல் லுக்கினை எடுத்துரைக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

லிமிடெட் எடிசனாக வெளிவந்திருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பம்சங்கள் புகுத்தப்படுள்ளன. அந்தவகையில், பாதுகாப்பு அம்சமாக கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் சிபிஎஸ் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. இத்துடன் 4இன்1 லாக்கிங் சிஸ்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

இந்த சிறப்பம்சம் மூலம், ஒரே லாக்கில், ஸ்கூட்டரின் இருக்கை, சைட் லாக், வாகனத்தை ஆஃப் செய்தல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட அனைத்தையும் லாக் செய்து கொள்ள முடியும்.

இதைத்தொடர்ந்து, ஸ்டார்ட் மற்றும் ரிலீஸ் பட்டனும் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம், சாவியை மட்டுமே திருகி ஸ்கூட்டரை ஆஃப் செய்யும் முறை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

அதேபோன்று, ஸ்கூட்டரின் மற்ற சிறப்பம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்டுகளில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் பிரகாசமானதாக இருக்கின்றது. இத்துடன், ஸ்போர்ட்டி ரகத்திலான டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், முன்பக்க பிடிமானம் மற்றும் ரெட்ரேக்டபிள் பின் பக்க ஹூக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சிறப்பு வசதியாக யுஎஸ்பி போர்ட், மொபைல் போனை சார்ஜ் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த ட்யூவல் டோன் லமிடெட் எடிசன் 2019 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ரெகுலர் எஸ்டிடி மற்றும் டிஎல்எஸ் ஆகிய இரு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதில், ஆக்டிவா எஸ்டிடி வேரியண்ட் ரூ. 55,032 என்ற விலையிலும், டிஎல்எக்ஸ் வேரியண்ட் ரூ. 58,897 என்ற விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது.

ஸ்பெஷலான ஆக்டிவாவிற்காக சிறப்பான வீடியோ வெளியிட்ட ஹோண்டா... எதற்கு தெரியுமா...?

இவையனைத்தும், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். பல்வேறு மாற்றங்களை லிமிடெட் எடிசன் ஆக்டிவா, அதன் எஞ்ஜினில் மட்டும் எந்தவொரு மாற்றத்தையும் பெறவில்லை. ஆகையால், முன்னதாக காணப்பட்ட அதே 109சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின்தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில், சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Honda Revealed 2019 Activa 5G Limited Edition TVC Video. Read In Tamil.
Story first published: Tuesday, July 9, 2019, 19:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X