போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

ஹோண்டா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் இருசக்கர வாகனங்களான பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

இந்நிலையில், இந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றான, ஆக்டிவாவின் பாகங்கள் போலியான தரத்தில் உற்பத்திச் செய்யப்பட்டு விற்பனைச் செய்வதாக அண்மைக் காலங்களாக, அதன் வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வந்தனர்.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, ஹோண்டா நிறுவனம் நாடு முழுவதும் உள்ள, அதன் வர்த்தகதாரர்கள் மற்றும் உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும், இப்பணியில் தற்போது ஐபிஆர் துறையின் குழுவையும் இணைத்துள்ளது.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. அதேசமயம், அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களிலும் இதுவே முதல் இடத்தைப் பிடித்து வருகின்றது. இதற்கு எதிராக பல ஸ்கூட்டர்கள் சந்தையில் களமிறக்கப்பட்டாலும் அவை, ஹோண்டா ஆக்டிவாவிற்கு ஈடு கொடுக்க முடியாமல், பின் தங்கியே நிற்கின்றன.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2 லட்சத்திற்கு அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி வருகின்றன.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும்விதமாக, சில டீலர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், ஹோண்டா ஆக்டிவாவிற்கான உதிரிபாகங்களை போலியாக தரத்தில் விற்பனைச் செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

அதேசமயம், ஆக்டிவா மட்டுமின்றி அந்நிறுவனத்தின் மற்ற ஸ்கூட்டர்களுடைய பாகங்களும் போலியாக தயாரித்து விற்பனைச் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. ஆகையால், அவற்றை கண்டுபிடிக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் அண்மைக் காலங்களாக மிகப்பெரிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

அவ்வாறு, நடத்தப்பட்ட சோனையில் இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி உதிரி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

ஆகையால், ஹோண்டா நிறுவனம் இதுகுறித்த பிரச்சாரத்தை கடந்த 2017ம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வருகின்றது. இத்துடன், போலி பாகங்களை தயாரித்து வரும் உற்பத்தி மையங்கள் மற்றும் அதனை விற்பனைச் செய்யும் டீலர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையையும் எடுத்து வருகின்றது.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

அந்தவகையில், தலைநகர் டெல்லி மற்றும் கட்டோக் பகுதியில் ஹோண்டா நிறுவனம், போலீஸாரின் உதவியுடன் கடந்த ஜீன் மாதம் அதிரடி ரெய்ட் நடத்தியது. அப்போது, 10,462 உதிரிபாகங்கள் போலியாக தயாரித்து விற்பனைச் செய்யப்பட்டது தெரியவந்தது. அதில், ஸ்கூட்டர்களுக்கான அக்ஸசெரீஸ், குவார்ட் கிட்டுகள், எஞ்ஜின் பாகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

இத்தகைய நடவடிக்கையை, டெல்லியின் பவானா இன்டஸ்டிரியல் மற்றும் கரோல் பகுதியில் செயல்பட்டு வந்த ஹோண்டா நிறுவனத்தின் இரு ஷோரூம்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. முறைகேட்டைத் தொடர்ந்து, அவ்விரண்டு சர்வீஸ் மையங்களின் உரிமையாளர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

இவ்வாறு, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 15க்கும் மேற்பட்ட ரைடுகளை ஹோண்டாவின் ஐபிஆர் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில், நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், செகந்திராபாத், டெல்லி, மும்பை, அஹமதாபாத், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டுள்ளது.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

இந்த சோதனையில், 94 ஆயிரம் போலி உதிரிபாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 கோடிக்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், தற்போது சந்தையில் அதிகமாக புழங்கி வரும் இதுபோன்ற போலி உதிரிபாகங்களை முழுவதுமாக ஒழித்துகட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. இத்துடன், போலி பாகங்கள் விற்பனைச் செய்யும் நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கையையும் அந்நிறுவனம் எடுத்து வருகின்றது.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

இத்துடன், போலியான உதிரபாகங்களால் வாடிக்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகாத வண்ணம் இருக்கை, விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

போலியை கண்டு ஏமாறாதீர்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஹோண்டா... அதிர்ச்சி தகவல்!!

நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள், சேவை மையங்கள் மற்றும் உதிரிபாகங்கள் விநியோகஸ்தர்களில் கிடைக்கும் ஹோண்டா உண்மையான தயாரிப்புகளை மட்டுமே வாடிக்கையாளர்கள் வலியுறுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹோண்டா உண்மையான பாகங்கள் உயர்-பாதுகாப்பு டேம்பர்-ப்ரூஃப் எம்ஆர்பி லேபிளுடன் சீல் வைக்கப்பட்டுள்ளன, இது பாதுகாப்பு-செறிவூட்டப்பட்ட அம்சங்கள் காரணமாக வேறுபடுத்துவது எளிது, மேலும் அசல் ஹாலோகிராம் அடங்கும்.

Most Read Articles
English summary
Honda Seizes Fake Spares Of Activa. Read In Tamil.
Story first published: Wednesday, July 31, 2019, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X