புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்!

கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ மூலமாக அறிமுகமான ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் தனித்துவமான ஸ்டைலால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் புதுப்பொலிவு கொடுக்கப்பட இருக்கிறது.

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்!

அதாவது, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் புதிய இரட்டை வண்ணக் கலவை தேர்வுகளில் வர இருக்கிறது. தற்போதைய மாடல் மேட் மார்வல் புளூ மெட்டாலிக், பியர்ல் ஸ்பார்ட்டன் ரெட், மேட் ஃப்ராஸன் சில்வர் மெட்டாலிக், பியர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் மேட் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்!

மேலும், பெட்ரோல் டேங்க் மற்றும் கவுல் அமைப்புகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. இதனால், இந்த பைக்கின் தோற்ற வசீகரம் மேலும் கூடுதலாகும் என்று தெரிகிறது.

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்!

வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று தகவல்கள் கூறுகின்றன. ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கில் 162சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்!

முன்சக்கரத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்!

ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹசார்டு இண்டிகேட்டர் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்!

வரும் பண்டிகை காலத்தின்போது புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், சுஸுகி ஜிக்ஸெர் 155, யமஹா எஃப்இசட் எஸ் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

Source:Bikewale

Most Read Articles
English summary
Honda To Launch X-Blade facelift Model around the festive season.
Story first published: Friday, April 19, 2019, 17:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X