ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுக விபரம் வெளியானது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுக விபரம் வெளியானது

பஜாஜ் - கேடிஎம் கூட்டணியின் அங்கமாக செயல்படும் ஹஸ்க்வர்னா நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால் பதிக்க உள்ளது. அந்நிறுவனத்தின் ஸவர்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 ஆகிய இரண்டு பைக் மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஆனால், எப்போது ஹஸ்க்வர்னா பைக்குகள் வர இருக்கின்றன என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுக விபரம் வெளியானது

இந்த நிலையில், ஹஸ்க்வர்னா பைக்குகள் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பஜாஜ் ஆட்டோ உயர் அதிகாரி ராகேஷ் ஷர்மா தெரிவித்தள்ளார். இதன்படி, கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் திருவிழாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுக நிகழ்வின்போதே, ஹஸ்க்வர்னா பைக்குகளும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.

ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுக விபரம் வெளியானது

கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையில் தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் ஹஸ்க்வர்னா 401 பைக்குகள் இந்தியா வர இருக்கின்றன. மேலும், இந்தியாவில் கேடிஎம் டீலர்கள் வழியாகவே ஹஸ்க்வர்னா பைக்குகளும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுக விபரம் வெளியானது

ஹஸ்க்வர்னா பைக்குகளின் வினியோகப் பணிகள் வரும் ஜனவரி மாதம் முதல் துவங்கப்பட இருக்கிறது. கேடிஎம் பைக்குகளை போலவே, தனித்துவமான ஸ்டைலில் வர இருக்கும் புதிய ஹஸ்க்வர்னா பைக்குகள் இப்போதே இந்திய இளைஞர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ளது.

MOST READ: ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுக விபரம் வெளியானது

கேடிஎம் 390 பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 373.2 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் புதிய ஹஸ்க்வர்னா 401 பைக்குகளிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎஸ் பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

MOST READ: 19 ஆண்டுகளில் 38 லட்சம் கார்கள் விற்பனை... புதிய மைல்கல்லை அடைந்திருக்கும் மாருதி ஆல்டோ

ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுக விபரம் வெளியானது

புதிய ஹஸ்க்வர்னா பைக்குகளில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கொடுக்கப்பட இருக்கிறது. அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், டபிள்யூபி மோனோஷாக் அப்சார்பர், முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இறுக்கும்.

MOST READ: பாஸ்ட்டேக்கால் வாகன உரிமையாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்... இதற்கெல்லாம் தீர்வு என்ன தெரியுமா?

ஹஸ்க்வர்னா பைக்குகள் அறிமுக விபரம் வெளியானது

புதிய ஹஸ்க்வர்னா 401 பைக்குகள் ரூ.2.8 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இது தனித்துவமான பைக்குகளை விரும்பும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Bajaj Auto has confirmed that the Husqvarna bikes will be launched India in the first week of December, 2019.
Story first published: Tuesday, November 26, 2019, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X