ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்திய வருகை விபரம்

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் புதிய ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்திய வருகை விபரம்

அண்மையில் கோவாவில் நடந்த இந்திய பைக் வீக் மோட்டார்சைக்கிள் திருவிழாவில் ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் அடிப்படையிலான இந்த பைக்குகளின் டிசைன் இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு வந்தவர்களை பெரிதும் கவர்ந்தன.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்திய வருகை விபரம்

வரும் ஜனவரி- மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் இந்த பைக்குகளின் விலை அறிவிப்பு மற்றும் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் ஸ்வர்ட்பிளேன் 200 பைக் தனது சர்வதேச இணையதள பக்கம் மூலமாக வெளியிட்டது ஹஸ்க்வர்னா.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்திய வருகை விபரம்

இந்த பைக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது. கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் அடிப்படையிலான இந்த புதிய பைக் மாடல் விலை குறைவான ஹஸ்க்வர்னா தேர்வாக இருக்கும் என்பதால் வாங்குவதற்கு இப்போதே பலர் திட்டம் போட்டு வருகின்றனர்.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்திய வருகை விபரம்

இந்த நிலையில், இந்த பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜூலை- செப்டம்பர் இடையிலான காலாண்டில் இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்திய வருகை விபரம்

கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கில் 199 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரையும், 19.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்திய வருகை விபரம்

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபருடன் கூடிய 230 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்திய வருகை விபரம்

ஸ்வர்ட்பிளேன் 250 பைக்கில் இருக்கும் அதே அலாய் வீல்கள்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், இந்த பைக்கில் சைலென்சர் எஞ்சினுக்கு கீழ் பக்கமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்திய வருகை விபரம்

கேடிஎம் 200 ட்யூக் பைக்கைவிட புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக் சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஸ்டைல் நிச்சயம் இந்திய இளைஞர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

Source: ACI

Most Read Articles
English summary
According to report, Husqvarna Svartpilen 200 will be launched in India by third quarter of 2020.
Story first published: Friday, December 20, 2019, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X