இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக் தாய்லாந்ததில் நடைபெற்று வரும் 2019 பேங்காக் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், இந்திய வருகை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

கடந்த 2015ம் ஆண்டு யமஹா YZF R3 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வாடிக்கையாளர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த 2017ம் ஆண்டு சில மாற்றங்களுடன் களமிறக்கப்பட்டது.

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், இரண்டாம் தலைமுறை மாடலாக முற்றிலும் மாற்றப்பட்ட யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. யமஹா ஆர்6 பைக் போன்ற ஃபேரிங் பேனல்கள் மற்றும் வடிவமைப்பில் மாறுதல்களுடன், புதிய உதிரிபாகங்களுடன் இந்த பைக் வந்தது.

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்கு மாறி இருக்கிறது. மேலும், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டு இருப்பதால், தற்போது இந்தியாவில் இருக்கும் மாடலைவிட ஹேண்டில்பார் அமைப்பு தாழ்ந்து இருக்கிறது.

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

புதிய சப்ஃப்ரேம் அமைப்பும், ஃபுட்பெக்குகள் பின்புறமாக தள்ளி பொருத்தப்பட்டுள்ளன. புதிய ஹேண்டில்பார் அமைப்பு, இருக்கை, ஃபுட்பெக்குகள் ஆகியவை சேர்ந்து புதிய ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும்.

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் தங்க வண்ணத்திலான அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் வால் பகுதியின் டிசைனிலும் மாற்றம் கண்டுள்ளது.

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

யமஹா ஆர்3 பைக்கில் இரண்டு இணை சிலிண்டர்கள் அமைப்புடைய 321சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 41.4 பிஎச்பி பவரையும், 26.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ இணைக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

புதிய யமஹா ஆர்3 பைக்கின் முன்புறத்தில் 298 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

தற்போது யமஹா ஆர்3 பைக் இந்தியாவில் ரூ.3.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல் இதனைவிட ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்!

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. கவாஸாகி நின்ஜா 300, கேடிஎம் ஆர்சி390 உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு போட்டியாக இந்த பைக் விற்பனைக்கு வர இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
India Bound New Yamaha YZF R3 showcased at 2019 Bangkok Motor Show.
Story first published: Friday, March 29, 2019, 12:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X