ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்.. இந்தியன் சேலஞ்ஜர் அறிமுக விபரம்!

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் க்ரூஸர் ரக பைக்குகளுக்கு போட்டியான மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், அதன் புத்தம் புதிய க்ரூஸர் ரக பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாடலுக்கு சேலஞ்ஜர் என்ற பெயரை அது வைத்துள்ளது. இந்த பைக் இளைஞர்களைக் கவருகின்ற வகையில் கவர்ச்சிகரமான ஸ்போர்ட்ஸ் லுக்கைப் பெற்றிருக்கின்றது.

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

இதற்கு முன்பாக இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின்மூலம் வெளிவந்த எந்தவொரு பைக்கிலும் இத்தகைய சிறப்பான வசதிகளும், வடிவமைப்பும் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.

ஆகையால், இந்தியன் சேலஞ்ஜர் தற்போது விற்பனையில் இருக்கும் க்ரூஸர் பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

அதற்கேற்ப வகையில், க்ரூஸர் ஸ்போர்டி லுக் சேலஞ்ஜர் பைக்கிற்கு உருவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் டிசைனை பார்த்தோமேயானால், ரெக்டாங்குலர் தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. தொடர்ந்து வௌவாலின் இறக்கைப் போன்ற அமைப்பில், பைக்கின் முகப்பு பகுதி காணப்படுகின்றது. இந்த முன் பக்கத்தில்தான் எல்இடி மின் விளக்கு நிறுவப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

இத்துடன், பைக்கின் பின் பக்கத்தின் இரு புறத்தில் இரண்டு சேட்டில் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை சற்று தாழ்வாக காணப்படுகின்றது. அதன் அடிப்பகுதியில் சற்று நீளமான அளவுடைய சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தோற்றம் பைக்கை மிகவும் ரம்மியமாக காட்சிப்படுத்த உதவுகின்றது.

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

தொடர்ந்து, நவீன தொழில்நுட்ப வசதியாக ப்ளூடூத் வசதி கொண்ட 7 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது, செல்போனை இணைக்க உதவும். இந்த வசதி ரைடர், பைக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகுறித்த தகவலை அறிந்துக்கொள்ள உதவும். இதுமட்டுமின்றி, பைக்கின் சில அம்சங்களைக் கட்டுப்படுத்தவும் இந்த ஸ்கிரீன் உதவுகின்றது.

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

மேலும், மூன்று ரைடிங் மோட்கள், சாவியில்லாமல் வாகனத்தை ஆன் செய்யும் வசதி, அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூடிய வின்ட்ஷீல்ட் உள்ளிட்ட பிரிமியம் வசதிகளும் சேலஞ்ஜர் பைக்கில் தரிசனம் கொடுக்கின்றன.

இந்தியன் நிறுவனம், இந்த சேலஞ்ஜர் மாடலை ஸ்டாண்டர்டு மாடலுடன் சேர்த்து இரண்டு வேரியண்டுகளில் அறிமுகம் செய்துள்ளது.

MOST READ: லிஃப்ட் கேட்டு விலையுயர்ந்த காரை திருடிய போலி போலீஸ்... இவர் யார் என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

அந்தவகையில், சேலஞ்ஜர் டார்க் ஹார்ஸ் மற்றும் சேலஞ்ஜர் லிமிடெட் ஆகிய இரு வேரியண்டுகளை அது அறிமுகம் செய்துள்ளது.

இதில், டார்க் ஹார்ஸ் வேரியண்ட் ஸ்போர்ட்ஸ் மாடலாகும். இது பார்ப்பதற்கு கருப்பு குதிரையைப் போன்று காட்சியளிக்கும். மேலும், ஒரு சில பகுதிகளை ஹைலைட் செய்து காட்டும் வகையில், ஆங்காங்கே குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: ஹீரோவான கெஜ்ரிவால்... பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி... என்ன தெரியுமா?

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

இத்துடன், சிறப்பு வசதியாக இரு ஹை-வேரியண்டில் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் டிராக் டார்க் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 6-ஆக்சிஸ் ஐஎம்யூ தொழில்நுட்பமும் காணப்படுகின்றது.

MOST READ: சின்ன குஷ்புவிற்கு அடித்த அதிர்ஷடத்தை பார்த்தீங்களா..! பல கோடி ரூபாய் கார் பரிசு... வழங்கியது யார்?

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

இந்த மூன்று வேரியண்டுகளிலும் பவர் ப்ளஸ் என்ற சிறப்பு திறன் வாய்ந்த எஞ்ஜின்கள் காணப்படுகின்றன. அந்த எஞ்ஜின் 1,769 சிசி திறன் கொண்டதாகும். இந்த லிக்யூடு கூல்டு, வி-ட்வின் மோட்டார் அதிகபட்சமாக 121.8 பிஎச்பி பவரையும், 173 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

தொடர்ந்து, பைக்கின் சிறப்பான லுக்கிற்காக பைக்கின் முன் பக்கத்தில் 19 இன்ச் வீலும், பின் பக்கத்தில் 16 இன்ச் வீலும் பொருத்தப்பட்டுள்ளது. இவையிரண்டிலும் மெட்ஸிலர் க்ரூஸ்டெக் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

மேலும், தரமான பிரேக்கிங் வசதிக்கா பைக்கின் முன்பக்க வீலில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் 298 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகள் புதிய இந்தியன் சேலஞ்ஜர் பைக்கில் காணப்படுகின்றன.

ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகளுக்கு சரியான போட்டியாளன் இதுதான்... புது ஸ்டைல், வசதிகளுடன் இந்தியன் சேலஞ்ஜர் அறிமுகம்..!

இந்த பைக் தற்போது உலகளாவிய வெளியீடாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இந்த பைக்கின் இந்திய வெளியீடு வருகின்ற 2020ஆம் ஆண்டிலேயே தெரியவரும். அப்படி களமிறங்குமேயானால், இந்த பைக் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் க்ரூஸர் பைக்குகளக்கு போட்டியாக அமரும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

Most Read Articles

English summary
Indian Motorcycle Unveiled Cruiser Type Motorcycle Challenger. Read In Tamil.
Story first published: Wednesday, October 30, 2019, 16:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X