90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி!

புதிய லிமிடெட் எடிசனுக்கு கிடைத்த அதிகபட்ச வரவேற்பை அடுத்து, அதற்கான உரிமையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஜாவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குப் போட்டியாக இந்தியாவில் மீண்டும் களமிறங்கி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கின்றது, ஜாவா நிறுவனம். உலகின் பழமையான நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்நிறுவனம் முதன்முதலில் கடந்த 1929ம் ஆண்டு, செக் குடியரசு நாட்டை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

அவ்வாறு, ஜாவா நிறுவனம் அதன் ஆக்கிரமிப்பைத் தொடங்கி வருகின்ற அக்டோபர் 23ம் தேதியுடன் 90 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றது. ஆகையால், தனது 91ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாட்டத்தில் திகைத்துள்ளது, ஜாவா.

மேலும், அதனை சிறப்பிக்கும் விதமாக ஜாவா கிளாசிக் 300 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

புதிய லிமிடெட் எடிசன் ஜாவா க்ளாசிக் 300 பைக், வழக்கமான ஜாவா க்ளாசிக் 300 மாடலைக் காட்டிலும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

இந்நிலையில், வழக்கமான ஜாவா கிளாசி 300 மாடலிற்கும், புதிய லிமிடெட் எடிசன் கிளாசிக் 300 மாடலுக்கும் இடையேயான வித்தியாசத்தை வெளிப்படுத்துகின்ற வகையிலான வீடியோ டீசரை ஜாவா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அதன் ரசிகர்களை கிரங்கடித்துள்ளது.

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

ஜாவா நிறுவனம், இந்தியாவை விட்டு வெளியேறி பின்னர் மீண்டும் நடப்பாண்டின் ஆரம்பத்தில் கால் தடம் பதிதத்தது. புத்துணர்வுடன் களமிறங்கிய அந்நிறுவனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இதைத்தொடர்ந்தே, இந்தியாவில் லிமிடெட் எடிசன் கிளாசிக் 300 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

அந்த பைக்குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், "பைக்கின் நலிவு, மெலிவுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில், அடர்ந்த புகை மண்டலத்தில் தோன்றிய தேவதையைப் போல காட்சியளிக்கின்றது புதிய லிமிடெட் எடிசன் கிளாசிக் 300 பைக். அத்துடன், புதிதாக பொறிக்கப்பட்டுள்ள கிராஃபிக்குகள் மற்றும் வண்ணத்தை அந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

ஜாவா, புதிய லிமிடெட் எடிசன் கிளாசிக் 300 பைக் மாடலின் 90 யூனிட்டுகளை மட்டுமே இந்தியா முழுவதிற்கும் விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது.

ஆகையால், குறிப்பிட்ட 90 அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே இந்த பைக்கைப் பெறவிருக்கின்றனர். இதற்கான புக்கிங் தற்போது நடைபெற்று வருகின்றது. அதற்காக முன்தொகையாக ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது.

MOST READ: வெறும் 999 ரூபாயில் கார்களுக்கான முழு பரிசோதனை திட்டம்... சென்னையில் கோ-பம்பர் நிறுவனம் அறிமுகம்!

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

இந்த நிலையில், ஜாவா எதிர்பார்த்தைவிட லிமிடெட் எடிசன் மாடலுக்கான புக்கிங்கும் அதிகளவில் குவிந்து வருகின்றது. ஆனால், 90 லிமிடெட் எடிசன் மாடல்களுக்கான உரிமையாளர்களை தேர்ந்தெடுக்க லக்கி டிராவ் போட்டியை வைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில், வெற்றிப்பெரும் வாடிக்கையாளர்களுக்கு பைக்குகள் வழங்கப்பட உள்ளன.

MOST READ: பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

லிமிடெட் எடிசன் பைக் அழகான பதிப்பைப் பெற்றிருக்கின்றது. அந்த வகையில், கணிசமான மாற்றத்தை அது பெற்றிருக்கின்றது.

அவ்வாறு, புத்தம் புதிய தோற்றத்தை வழங்கும் வகையிலான கலர் தீமாக அடர்ந்த சிவப்பு மற்றும் க்ரீம் நிறம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்பெஷல் எடிசனை பிரதிபலிக்கின்ற வகையிலான ஸ்டிக்கர் பெட்ரோல் டேங்கின் மீது ஒட்டப்பட்டுள்ளது.

MOST READ: அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

மேலும், கூடுதல் பாதுகாப்பு வசதியாக ட்யூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிங்கில் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனும் கிடைக்கின்றது.

இந்த புதிய மாற்றங்கள், வெளிப்புறத் தோற்றம் மற்றும் டிசைனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், எஞ்ஜின் திறன் வழக்கமான கிளாசிக் 300 பைக்கில் காணப்படுவதைப் போன்றே உள்ளது.

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

அந்தவகையில், 293 சிசி திறனை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் எஞ்ஜின் அந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது. அது அதிகபட்சமாக 26 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது, 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கக்கூடியது.

90 வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி...

இந்த புத்தம் புதிய ஸ்டைலிலான ஜாவா பைக் வருகின்ற நாளை (15ம் தேதி) முதல் டீலர்கள் ஷோரூமில் காட்சியளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிங்கிள் சேனல் மாடலுக்கு ரூ. 1.64 லட்சமும், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ரூ. 1.72 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

English summary
Jawa Anniversary Edition Video Details. Read In Tamil.
Story first published: Monday, October 14, 2019, 12:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X