எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...

ஜாவா பெராக் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது ஜாவா, ஜாவா 42, ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மாடல்களுக்கு மட்டுமே முன்பதிவு ஏற்கப்பட்டு டெலிவரி கொடுக்கப்பட்டது.

எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...

ஜாவா பெராக் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. இந்த சூழலில் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்தது. இதனை கொண்டாடும் விதமாக, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஜாவா பெராக் பைக் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...

இது பாபர் ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், ஜாவா பெராக் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அனைவரும் காத்து கொண்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆம், ஜாவா பெராக் பைக்கிற்கு வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முன்பதிவு ஏற்கப்படவுள்ளது.

எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...

ஜாவா பெராக் பைக்கை புக்கிங் செய்ய காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கப்படும். ஜாவா பெராக் பைக்கிற்கு 1.94 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...

பெராக் மோட்டார்சைக்கிள்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைய கூடாது என ஜாவா விரும்புகிறது.

MOST READ: பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றவருக்கு நேர்ந்த கதி இதுதான்... என்ன நடந்தது தெரியுமா?

எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...

ஏற்கனவே ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மாடல்களும் வாடிக்கையாளர்களுக்கு சரியாக டெலிவரி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2 மாடல்களையும் டெலிவரி கொடுப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறின. இதனால் புக்கிங் செய்திருந்த வாடிக்கையாளர்கள் சமூக வலை தளங்களில் தங்கள் அதிருப்தியை கொட்டி தீர்த்தனர்.

MOST READ: நடுநடுங்க வைக்கும் வீடியோ... நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்ட கார்-பைக்... எவ்வளவு வேகம் தெரியுமா?

எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...

அதேபோன்றதொரு நிலைமை பெராக் பைக்கிற்கு ஏற்பட்டு விடக்கூடாது என ஜாவா நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாவா பெராக் பைக்கில், 334 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், டிஓஎச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இந்த இன்ஜின் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமானது.

MOST READ: மோடி அரசின் உருப்படியான யோசனை... பெட்ரோல், டீசல் செலவு குறைய போகுது... மகிழ்ச்சி கடலில் மக்கள்...

எல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...

ஜாவா பெராக் பாபர் மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் போர்க்கும், பின் பகுதியில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரை, முன் பகுதியில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியும் கொடுக்கப்படுகிறது.

Source: carandbike

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

ஜாவா பைக்குகளின் டெலிவரி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும் எழுந்துள்ள சூழலில், வாடிக்கையாளர் ஒருவர் மிக குறைவான நாட்களில் ஜாவா பைக்கை டெலிவரி பெற்றுள்ளார். இந்த உண்மையை நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

ஜாவா பைக்கை முன்பதிவு செய்து மிக மிக குறுகிய காலத்தில் வாடிக்கையாளர் ஒருவர் டெலிவிரி பெற்றிருக்கிறார். இது வாடிக்கையாளர் மத்தியில் ஒருபுறம் மகிழ்ச்சியையும், முன்பதிவு செய்து பல மாதங்களாக காத்திருப்போருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஜாவா பிரியர்கள் இந்த பைக்குகளை அடித்து பிடித்து முன்பதிவு செய்தனர். எப்படியும் சில மாதங்களில் பைக் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் முன்பதிவு செய்தனர்.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

ஆனால், வினியோகப் பணிகள் பல மாதங்கள் கழித்து ஒருவழியாக துவங்கினாலும், சொற்ப எண்ணிக்கையிலேயே டெலிவிரி கொடுக்கப்படுகின்றன. இதனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பொறுமையிழக்கும் நிலை ஏற்பட்டு சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

ஆனால், முன்பதிவு செய்து சிலர் 11 மாதங்களாக காத்துக்கிடக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை ஜாவா நிறுவனம் கடுமையாக சோதித்து வருகிறது. சிலர் முன்பதிவை ரத்து செய்துவிட்டு, பிற நிறுவனங்கள் பக்கம் திரும்பினர்.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

இந்த நிலையில், சண்டிகர் நகரை சேர்ந்த ஜஸ்மித் சிங் என்ற வாடிக்கையாளர் முன்பதிவு செய்து 16 நாட்களில் ஜாவா 42 பைக்கை டெலிவிரி பெற்றிருப்பதாக ஜாவா உரிமையாளர் குழுவினருக்கான சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

இந்த பதிவை பார்த்த பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாலும், கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நெருங்கும் வரையில் பொறுமையுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

அதாவது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவுகள் வரிசை கிரமமாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஜாவா பைக்குகள் டெலிவிரி கொடுக்கப்பட்டு வருகின்றன. டீலர்களில் முறைகேடுகளை தவிர்க்க, இதற்காக பிரத்யேக இணையதளத்தை ஜாவா பயன்படுத்தி வருகிறது.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

ஆனால், ஜஸ்மித் சிங் எவ்வாறு ஜாவா 42 பைக்கை வெறும் 16 நாட்களில் டெலிவிரி பெற்றிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் ஆன்லைன் முன்பதிவு வரிசையை கடந்து எவ்வாறு டெலிவிரி பெற்றார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

அது அவருக்கும் தெரியவில்லை என்றே தெரிகிறது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் டெலிவிரி கிடைக்கும் என்று ஆன்லைன் தளத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சொற்ப நாட்களில் டெலிவிரி பெற்றிருப்பது அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

ஜாவா 42 பைக்கின் பச்சை வண்ணத்திலான சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலை அவர் வாங்கி இருக்கிறார். இந்த பைக்குடன் இருக்கும் படங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

ஜாவா பைக்கின் காத்திருப்பு காலம் குறைந்துள்ளதா? என்ற கோணத்திலும் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் குழப்பத்துடன் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை ஜாவா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இல்லை.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

கடந்த 11 ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி வந்தேன். இது நிச்சயம் மதிப்பு வாய்ந்த பைக் என்று ஜாவா 42 பைக்கை அவர் பாராட்டி பதிவு செய்துள்ளார். அவர் பைக்கை டெலிவிரி பெற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஆச்சர்யம், ஆனாலும் உண்மை... ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!

இந்த பைக்கில் 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஜாவா 42 பைக் ரூ.1.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Image Courtesy

மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு!

ஜாவா பைக்குகளில் டெலிவரி குழப்பம் மட்டுமல்லாது மற்றொரு பிரச்னையும் நடந்தது. புத்தம் புதிய பைக்குகளில் துரு ஏறியதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ச்சியாக ஒரு சில பைக்குகளில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு!

மும்பையை சேர்ந்த சைலேஷ் சுவர்ணா என்ற வாடிக்கையாளர் சமீபத்தில் ஜாவா பைக்கை டெலிவிரி எடுத்துள்ளார். ஆனால், டெலிவிரி எடுத்த 15 நாட்களிலேயே அவரது ஜாவா பைக்கின் பல முக்கிய பாகங்கள் துருப் பிடித்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் டீலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு!

வேறு வழியில்லை

ஆனால், பைக்கை பயன்படுத்தி விட்டதால், மாற்றித் தர இயலாது, துருப்பிடித்த பாகங்களை பெயிண்ட் அடித்து கொடுத்துவிடுவதாக கூறி இருக்கின்றனர். வேறு வழியில்லாததால் அவர் ஒப்புக் கொண்டுவிட்டார். இதுதொடர்பாக, அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் படங்களை போட்டு குமுறி இருந்தார். இது முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு!

மற்றுமொரு பைக்கிலும் துருப் பிரச்னை

இந்த நிலையில், அடுத்து ஒரு ஜாவா பைக் உரிமையாளரும் துருப் பிடித்த பிரச்னையை ஃபேஸ்புக் மூலமாக வெளியுலகத்திற்கு பட்டவர்த்தனமாக்கி இருக்கிறார். ஆதர்ஷ் குப்தா என்பவர் சமீபத்தில் தனது ஜாவா பைக்கை டெலிவிரி எடுத்துள்ளார்.

மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு!

மட்டரகமான பெயிண்ட்

டெலிவிரி எடுத்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், எஞ்சின் ஹெட் உள்ளிட்ட பல பகுதிகளில் துரு ஏறி இருப்பது குறித்த படங்களை பதிவு செய்துள்ளார். அதாவது, மிக மட்டரகமான தரத்திலான பெயிண்ட் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு!

குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்

இதனால், வாங்கி இரு வாரங்களுக்குள்ளாகவே அந்த பைக்கில் துரு ஏறிவிட்டது. இது ஜாவா வாடிக்கையாளர்களை மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ஜாவா பைக்கை வாங்கலாமா? வேண்டாமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சாதாரண நிறுவனம் கூட இப்போதைய காலக்கட்டத்தில் தர விஷயத்திற்கே முன்னுரிமை கொடுக்கின்றன.

மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு!

வாடிக்கையாளர்கள் குமுறல்

தரத்தையும், பாரம்பரியத்தையும் வைத்துதான் பல வாடிக்கையாளர்கள் லட்சத்தை கொட்டி இதுபோன்ற பாரம்பரிய மதிப்பு உடைய பைக்குகளை வாங்குகின்றனர். ஆனால், அவர்களது எதிர்பார்ப்பை பொய்க்கும் விதத்தில், ஜாவா பைக்குகளில் துரு ஏறும் பிரச்னை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு!

கோரிக்கை

இந்த விஷயத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு தரமான பெயிண்ட் பயன்படுத்துவதற்கும், தர நிர்ணய விஷயங்களில் ஜாவா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜாவா பைக் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Most Read Articles

English summary
Jawa Perak Booking, Delivery Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X