கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்

கவாஸாகி நிறுவனத்தின் சக்திவாய்ந்த அட்வென்ச்சர் டூரர் வகை மோட்டார்சைக்கிள் மாடலாக வெர்சிஸ் 1000 விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் தனித்துவமான அம்சங்களுடன், தொழில்நுட்ப அம்சங்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகம் விசாரணை போட்ட வண்ணத் தேர்வை இப்போது வழங்க உள்ளதாக கவாஸாகி தெரிவித்துள்ளது. அதாவது, கவாஸாகி நிறுவனத்தின் பைக்குகளில் கிளிபச்சை மற்றும் கருப்பு வண்ணக் கலவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த ஒன்று. பார்த்தவுடனே கவாஸாகி பைக் என்று கூறிவிடும் அளவுக்கு இது கவாஸாகி பிரியர்கள் மத்தியில் பிரசித்தம்.

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்

இந்த வண்ணத் தேர்வுதான் தற்போது கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பிற வண்ணத் தேர்வுகள் விற்கப்படும் அதேவிலையில்தான் இந்த வண்ணத் தேர்வும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரூ.10.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த பைக் கிடைக்கும்.

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1,043 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 102 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் சீரான பவர் டெலிவிரியை இந்த எஞ்சின் வழங்கும் விதத்தில் டியூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

MOST READ: சத்தியமா இத நீங்க நம்பவே மாட்டீங்க... இந்தியாவில் சுஸுகி பைக்குகளுக்கு இப்படி ஒரு வரவேற்பா...!

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்

இந்த பைக்கில் இரட்டை அறை அமைப்புடன் கூடிய எல்இடி ஹெட்லைட், அட்ஜெஸ்ட் வசதியுடன் விண்ட்ஸ்கிரீன் அமைப்பு, அனலாக் மற்றும் டாக்கோமீட்டர் மற்றும் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ: அட இவ்வளவு கை ராசிக்காரரா நம்ம எடப்பாடியார்

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்

இந்த பைக்கில் அலுமினியத்தாலான ட்வின் ப்ரேம் அமைப்பு, 43 மிமீ அளவுடைய இன்வர்டெட் ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்,ன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு மோனோ ஷாக் அப்சாப்ரப் ஆகியவை உள்ளன. இதன் சஸ்பென்ஷன் மிகச் சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் என கவாஸாகி தெரிவிக்கிறது.

MOST READ: ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல கார் நிறுவனங்கள்..

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்

இது மட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் குறிப்பிட்ட வேகத்தில் பைக்கை செலுத்தும் எலெக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வளைவுகளில் திரும்பும்போது பைக் கீழே விழாதவாறு தவிர்த்துக் கொள்ள உதவும் கார்னரிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம், அதிக தரைப்பிடிப்பை வழங்குவதற்கான டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஆன்ட்டி லாக்கிங் பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki has introduced new colour option in Versys 1000 adventure tourer bike in India.
Story first published: Monday, November 4, 2019, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X