கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்...!

கவாஸாகி நிறுவனம் அதன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறையும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவலையும் இந்த பதிவில் காணலாம்.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

ஜப்பானைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி, ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிளைத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என இரு தரப்பினரையும் கவரும் வகையில் ஸ்போர்ட்ஸ் ரக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனத்தின் மூலம் வெளியான நிஞ்சா உள்ளிட்ட பல மாடல்கள் சர்வேத அளவில் மிகவும் பிரபலமானவை.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

ஆனாலும், கவாஸாகி மோட்டார்சைக்கிள்கள் மீது தீராத காதல் கொண்ட இளைஞர்கள், அதற்கான சந்தையை விட்டுக்கொடுக்காமல் தக்க வைத்து வருகின்றனர். அவ்வாறு, சமீபத்தில் வெளியான நிஞ்சா இசட்எக்ஸ்-6 ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மாடலாக இருக்கிறது.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

இதேபோன்று, இந்தியாவிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே தனது உற்பத்தி நிலையங்களை வைத்து நடத்தி வருகிறது கவஸாகி நிறுவனம். இதன்காரணமாக, இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் மோட்டார்சைக்கிள்கள் சற்று கூடுதலான விலையில் இதன் இருசக்கர வாகனங்கள் விற்கப்படுகின்றன.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

நடுத்தர எடையில் சூப்பர் ஸ்போர்ட் மாடலாக விற்பனைக்கு களமிறங்கிய இந்த மாடலுக்குப் போட்டியாக வேறு எந்த நிறுவனமும் மோட்டார்சைக்கிளைக் களமிறக்காத காரணத்தால் இந்த மோட்டார்சைக்கிளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று, அதிநவீன தொழில்நுட்ப வசதியையும், பிரமாண்டமான தோற்றத்தையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றிருப்பதால் விற்பனையில் தனிகாட்டு ராஜவாக மாறி வருகிறது.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

இசட்எக்ஸ்-10ஆர் மாடலின் மினி மாடலாக களமிறங்கியுள்ள இந்த இசட்எக்ஸ்-6 ஆர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டநிலையில், தற்போது வரை விற்பனையில் சிறப்பாக விலங்கி வருகிறது.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

இந்நிலையில், கவாஸாகி நிறுவனம் அதன் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அதன் ரசிகர்கள் பலர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆம், கவாஸாகி நிறுவனம் அதன் லைன் அப்பில் விற்பனையாகி வரும் மோட்டார்சைக்கிள்களின் விலையை கணிசமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

இந்த அறிவிப்பால் கவாஸாகி நிறுவனத்தின்மூலம் இந்தியாவில் விற்பனையாகி வரும் மோட்டார்சைக்கிளின் விலை 7 சதிவிகித உயர்வை அடைந்துள்ளது. இந்த அறிவிப்பானது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. சத்தமே இல்லாமல் உயர்த்தப்பட்ட இந்த விலை அதிகரிப்பு அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

அவ்வாறு, இந்த நிறுவனத்தின் விலை உயர்வு ரூ. 1,900 முதல் ரூ. 3.80 லட்சம் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதில் வெர்சிஸ் எக்ஸ்-300, வெர்சிஸ் 650, நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர், நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் மற்றும் நிஞ்சா 300 ஆகிய மோட்டார்சைக்கிளின் விலையை மட்டும் மாற்றாமல், பழைய விலையிலேயே விற்பனைச் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

ஆனால், நிஞ்சா 400 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனத்தில் உச்சகட்ட விலை உயர்வை நிஞ்சா எச்2ஆர் மாடல் பெற்றுள்ளது. அந்த வகையில், அதன் விலையில் ரூ.3.80 லட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் மிகவும் குறைவான விலை உயர்வாக ரூ.1,900-யை கவாஸாகி இசட்900 மாடல் பெற்றுள்ளது.

கவாஸகியின் திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்... இந்த அறிவிப்பை விட இது தான் காரணமா...?

இந்த விலை உயர்வால் கவாஸாகியின் நிஞ்சா400 மாடல் மோட்டார்சைக்கிள் ரூ.4.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இதேபோன்று, கவாஸாகி நிறுவனத்தின் மூலம் விற்பனையாகி வரும் மேலும் சில மாடல்களும் இந்த விலை உயர்வைப் பெற்றுள்ளன. அதனை பட்டியலாக கீழே காணலாம்:

கவாஸாகியின் விலை உயர்வுப் பட்டியல்:

Model Old Price New Price
Kawasaki Vulcan (Black) Rs 5,48,400 Rs 5,49,900
Kawasaki Vulcan S (Orange) Rs 5,58,400 Rs 5,59,900
Kawasaki Ninja 400 Rs 4,69,000 Rs 4,99,000
Kawasaki Ninja 650 Rs 5,49,000 Rs 5,89,000
Kawasaki Ninja 650 (KRT) Rs 5,69,000 Rs 5,99,000
Kawasaki Ninja 1000 Rs 9,99,900 Rs 10,29,000
Kawasaki Ninja H2R Rs 72,00,000 Rs 75,80,000
Kawasaki Ninja H2 SX Rs 21,80,000 Rs 22,89,000
Kawasaki Ninja H2 SX SE Rs 26,80,000 Rs 28,19,000
Kawasaki Ninja H2 Rs 33,30,000 Rs 34,99,000
Kawasaki Ninja H2 Carbon Rs 39,80,000 Rs 41,79,000
Kawasaki Z650 Rs 5,29,000 Rs 5,69,000
Kawasaki Z900 Rs 7,68,000 Rs 7,69,900
Kawasaki Z900RS Rs 15,30,000 Rs 15,70,000
Kawasaki Versys 1000 Rs 10,69,000 Rs 10,89,000
Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Lineup In India Gets A 7per Price Hike. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X