விசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் அறிமுகம்!

இந்திய சூப்பர் பைக் சந்தையில் கவாஸாகி நின்ஜா 1000 பைக் முதன்மையான தேர்வாக இருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், விசேஷமான புதிய வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் அறிமுகம்!

கவாஸாகி நின்ஜா 1000 பைக் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் கேண்டி லைம் க்ரீன் வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக மெட்டாலிக் மேட் ஃப்யூஷன் சில்வர் என்ற புதிய வண்ணத்திலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சில்வர் வண்ணக் கலவையானது லிமிடேட் எடிசன் மாடலாக வந்துள்ளது.

விசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் அறிமுகம்!

மொத்தமாகவே 60 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த விசேஷ வண்ணக் கலவையிலான கவாஸாகி நின்ஜா 1000 பைக்கிற்கு ரூ.10.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் அறிமுகம்!

கவாஸாகி நின்ஜா 1000 பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1,043 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 111 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

விசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் அறிமுகம்!

கவாஸாகி நின்ஜா 1000 பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மிமீ டியூவல் டிஸ்க்குகளும், பின்புறத்தில் 250 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

விசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் அறிமுகம்!

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக்கில் எல்லஇடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஸிலிப்பர் க்ளட்ச், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

விசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் அறிமுகம்!

கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக்கில் 19 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 1,440 மிமீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 130 மிமீ ஆக உள்ளது. 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் அறிமுகம்!

இந்தியாவில் விற்பனையில் உள்ள மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த சூப்பர் பைக் மாடலாக கவாஸாகி நின்ஜா 1000 விளங்குகிறது. கவர்ச்சிகரமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சரியான பட்ஜெட் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki has launched a new colour scheme for their 2019 Ninja 1000 in the Indian market. The 2019 Kawasaki Ninja 1000 will come with a 'Metallic Matte Fusion Silver paint scheme and is priced at Rs 10.29 lakh, ex-showroom (India).
Story first published: Friday, July 5, 2019, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X