புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா: இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்கிடுவீங்க!

கவாஸாகி நிறுவனம், நிஞ்சா 250 பைக்கை ரிமோட் கீ தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் சிறப்பம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்தியச் சந்தையே எனக்கு வேண்டாம் என கூறி, அண்மையில் நாட்டை விட்டு வெளியேறிய கவாஸாகி நிஞ்சா 250 மாடல் பைக், புதுப்பொலிவுடன் 2019ம் ஆண்டிற்கு ஏற்பவாறு பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்று இந்தோனேசியாவில் அறிமுகமாகி இருக்கின்றது.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

அந்தவகையில், மிக முக்கிய சிறப்பம்சமாக, கவாஸாகி நிஞ்சா 250 பைக்கில் கிபாஸ் எனப்படும் கவாஸாகி நிறுவனத்தின் இன்டலிஜெண்ட் ப்ராக்ஸிமிட்டி ஆக்டிவேஷன் ஸ்டார்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த அம்சம், நிஞ்சா 250 எஸ்இ, நிஞ்சா 250 ஏபிஎஸ் எஸ்இ மற்றும் நிஞ்சா 250 ஏபிஎஸ் எம்டிபி எஸ் ஆகிய மூன்று மாடல்களிலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களும் அந்நாட்டு மதிப்பில் 67,800,000-75,500,000 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இது, இந்திய மதிப்பில் ரூ. 3.32 - ரூ. 3.7 லட்சமாகும்.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

அதேசமயம், இந்த பைக் வித விதமான வண்ணத் தேர்விலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆனால், அவை வேரியண்டிற்கு ஏற்பவாறு மாற்றத்தைக் கொண்டதாக இருக்கும். அவ்வாறு, 2019 நிஞ்சா 250 எஸ்இ மாடல் பைக் லைம் கிரீன் நிறத்துடன் மேக்னடிக் டிசைன் பெயிண்டிங்கிலான சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கின்றது. மேலும், இபோனி/ மெட்டாலிக் மேக்னடிக் டார்க் கிரே நிறத்திலும் இந்த பைக் கிடைக்கின்றது.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மேக்னடிக் டிசைன் பெயிண்டிங் என்பது ஸ்பெஷல் பெயிண்டிங் தொழில்நுட்பமாகும். இது, 3டி எஃபெக்டில் பைக்கை காட்சிப்படுத்த உதவும். அதேசமயம், இந்த அம்சம் ஏற்கனவே அழகாக இருக்கும் நிஞ்சா 250 மாடலை மேலும் மெருகேற்றிக் காட்டும். மேலும், இந்த பெயிண்டிங்கை ஸ்கிராட்சுகளில் இருந்து காக்கும் வகையில், பாதுகாப்பு பெயிண்டிங் ஒர்க்கும் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

கவாஸாகி நிறுவனம், கிபாஸ் திறனிலான இந்த பைக்கை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக, கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இதனை, நிரூபிக்கும் வகையில் தற்போது இந்தோனேசிய சந்தையில் கவாஸாகி நிறுவனம், நிஞ்சா 250 பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இதில், சிறப்பம்சமாக போர்டபிள் இம்மொபிலைசர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது, சாவி இல்லாமலேயே பைக்கைப் பயன்படுத்த உதவும். இதற்காகவே, கிபாஸ் என்ற தொழில்நுட்பம் இந்த பைக்கில் இணைக்கப்பட்டுள்ளது. இது, பைக்கிற்காக வழங்கப்படும் மாஸ்டர் கீ இல்லாமலேயே ஆன்/ஆஃப் செய்ய உதவும். மேலும், ஸ்டியரிங் லாக் மற்றும் அன் லாக் செய்யவும் அது உதவும்.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த அம்சம் பைக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளிலிருந்து காக்க உதவும். இந்த குறிப்பிட்ட அம்சம் அந்நிறுவனத்தின் கவாஸாகி 1400 ஜிடிஆர்/ கான்கோர்ஸ் ஸ்போர்ஸ் டூரர் 14 உள்ளிட்ட மாடல்களிலேயே முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது கவாஸாகி நிஞ்சா 250 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

அதேசமயம், இந்த அம்சம் பைக்கிற்கு சாவி தேவை என்ற சூழலை தவிர்க்கவும் உதவுகின்றது. மேலும், பைக்கை கூடுதல் பாதுகாப்பானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் மாற்ற உதவும். இந்த ஸ்மார்ட் கீயின் தொழில்நுட்பம் பொருந்திய ஃபாப் கீ முனைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது, கார்களில் வழங்கப்படும் ஸ்மார்ட் கீயைப் போன்று காட்சியளிக்கின்றது.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

அதேசமயம், இந்த கீ அமைப்பு ப்யூவல் டேங்க் மற்றும் ரியர் இருக்கையை திறக்க உதவும். இந்த பைக்கில், அதீத திறனை வெளிப்படுத்தும் வகையில் 250 சிசி திறன் கொண்ட பேரல்லல் ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 39 பிஎஸ் பவரையும், 23.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமான கவாஸாகி நிஞ்சா... இதன் சிறப்பு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இத்துடன், பைக்கின் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக அதன் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோசாக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கின் கெர்ப் எடை 164 கிலோகிராமாக இருக்கின்றது. அத்துடன், அதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 145 மிமீட்டராக உள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja 250 Launched With Keyless Engine Start System. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X