அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

கவாஸாகி நிறுவனம், நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில், இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வண்ணம் கொண்ட நிஞ்சா பைக் பார்ப்பதற்கு ரம்மியமான காட்சியை வழங்குகிறது. மேலும், இந்த பைக் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

காவாஸகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடலான நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலை புதிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், புதிய வண்ணங்களாக, லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூன் டஸ்ட் கிரே ஆகிய இரு நிறங்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. இந்த வண்ண மாற்றமானது, அதன் விலையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

ஆகையால், உள்நாட்டிலயே அசெம்பிள் செய்யப்படும் இந்த புதிய நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடல், ரூ. 2.98 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே தற்போதும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது, நிஞ்சா 300 சிபியு வேரியண்டைக் காட்டிலும் ரூ. 80 ஆயிரம் குறைவாகும்.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

விலையில் மட்டுமே அதிகமாக காணப்படும் நிஞ்சா சிபியு மாடல், வசதியில் 300 ஏபிஎஸ் மாடலைக் காட்டிலும் குறைவாகவே இருக்கின்றது. அந்தவகையில், மிகப் பெரிய குறையாக ஏபிஎஸ் வசதி அதில் இடம்பெறவில்லை. அதேசமயம், இந்தியாவில் தயாராகிய நிஞ்சா 300 சிகேடி மாடலில் ட்யூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

கவாஸாகியின் இந்த நடவடிக்கைக்கு, உள்நாட்டிலேயே வைத்து நிஞ்சா 300 மாடல் உற்பத்தி செய்வதுதான் காரணமாக இருக்கின்றது. அதேபோன்று, இவைதான் விலை குறைப்பிற்கு காரணமாக உள்ளது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுமானால், அதிக விலை கொண்டதாகவும், பல்வேறு சிறப்பம்சங்களை இழைந்ததாகவும் களமிறங்க நேர்ந்திருக்கும் அல்லது அதிக வசதிகளுடன் அதிக விலைக் கொண்டதாக இருந்திருக்கும்.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

நிஞ்சா 300 மாடல் பைக்கின் எஞ்ஜின் மற்றும் சேஸிஸ் உள்ளிட்டவை இந்தியாவிற்கு சிகேடி வழியாக தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றது. ஆனால் அதிகப்படியான பாகங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுபவையாக இருக்கின்றன. அந்தவகையில், மின்விளக்கு, சஸ்பென்ஷன், அலாய் வீல்கள், ஸ்விட்சுகள் உள்ளிட்ட பல பாகங்கள் உள் நாட்டு உற்பத்தியாக இருக்கின்றது.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

கவாஸாகி நிஞ்சா 300ஏபிஎஸ் பைக்குகள் புனேவில் உள்ள சக்கன் பிளாணட்டில் வைத்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, நிஞ்சா 400, நிஞ்சா 650, இசட்650, வெர்சிஸ்-எக்ஸ் 300, வெர்சிஸ் 650, வல்கன் எஸ், நிஞ்சா 1000, நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர், வெர்சிஸ் 1000 உள்ளிட்ட பைக்குகளும் இங்கு வைத்துதான் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

நிஞ்சா 300 ஏபிஎஸ் சிகேடி பைக் இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு ஜீலை மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கிற்கு புக்கிங்குகள் ஆயிரத்திற்கும் மேலாக குவிந்தநிலையில், அதனை புக் செய்தா வாடிக்கைாளர்களுக்கு கடந்த ஆக்ஸ்டு மாதம் முதல் டெலிவரி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவிற்கு இது வரவேற்பு பெற்றதால், இந்த வரிசையில் அதிகம் விற்பனையாகும் பைக்காக நிஞ்சா 300 ஏபிஎஸ் மாறியது.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

இந்த புதிய மைல்கல்லை நிஞ்சா 300 பைக் எட்டியதன் காரணமாக, இதனைச் சிறப்பிக்கும் வகையில், புதிய நிறத்திலான நிஞ்சா 300 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நிஞ்சா 300 பைக்கில் ஏற்கனவே பச்சை நிறத்துடன் கூடிய இபோனி மற்றும் கேன்டி பிளாஸ்மா ப்ளூ ஆகிய நிறங்கள் இருக்கும்நிலையில், புதிதாக லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூன் டஸ்ட் கிரே ஆகிய இரு நிறங்களும் இணைந்துள்ளன.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

கவாஸாகி நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடல் ஹை டென்ஸில் ஸ்டீல் ஃபிரமால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த பைக்கில், ட்யூவல் ஹெட்லேம்ப், அப்டேடட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் ஃபங்க்ஷன் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், பைக்கின் முன்பக்கத்தில் 17 இன்ச் கொண்ட வீலும், அதற்கு 110/70 அளவு கொண்ட டயரும் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பின்பக்கத்தில் 140/70 அளவுகொண்ட டயர் வழங்கப்பட்டுள்ளது.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

இத்துடன் பைக்கில் அதிக திறனை வெளிப்படுத்தும் வகையில், 296சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின், லிக்யூடு கூல்ட், டிஓஎச்சி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது. 39 பிஎஸ் பவரை 11,000 ஆர்பிஎம்மிலும், 27 என்எம் டார்க்கை 10,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அதிரடி காட்டும் கவாஸாகி: நிஞ்சா 300 ஏபிஎஸ் மாடலில் புதிதாக இரண்டு வண்ணங்கள் அறிமுகம்...!

மேலும் பாதுகாப்பு வசதியாக, ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் டிஸ்க் பிரேக் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பைக்கின் முன்பக்கத்தில் 290 எம்எம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 220எம்எம் டிஸ்க் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறந்த சஸ்பென்ஷனுக்காக, முன்பக்கத்தில் 37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கேஸ் சார்ஜட் மோனோசாக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja 300 ABS Gets Two New Colour Options. Read In Tamil.
Story first published: Wednesday, May 29, 2019, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X