கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

பிரிமீயம் பைக் தயாரிப்பில் உலக பிரபலமான ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் நின்ஜா குடும்ப வரிசையில் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட பைக் மாடல்களையும், Z என்ற குடும்ப வரிசையில் ஃபேரிங் பேனல்கள் அல்லாத திறந்த உடல் அமைப்புடைய நேக்கட் ரக பைக்குகளையும் விற்பனை செய்து வருகிறது.

கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இந்த நிலையில், கவாஸாகி நிறுவனத்தின் பொறியியல் வல்லமையை பரைசாற்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட நின்ஜா எச்2 சூப்பர் பைக் உலக அளவில் பைக் பிரியர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக இருக்கிறது.

இதன் அடிப்படையில் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்படாத, ஃபேரிங் பேனல்கள் இல்லாமல் திறந்த உடல் அமைப்புடன் டிசைன் செய்யப்பட்ட புதிய இசட் எச்2 பைக் மாடலை கவாஸாகி உருவாக்கி உள்ளது. இந்த பைக் இன்று துவங்கிய டோக்கியோ மோட்டார் ஷோவில் முறைப்படி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

மிரட்டலான ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், வலிமையான உடல் அமைப்புடன் சூப்பர் பைக் பிிரியர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கிளி பச்சை வண்ணத்திலான துணை ஃப்ரேம் அமைப்பும் பைக்கின் தோற்றத்திற்கு வசீகரத்தை சேர்க்கிறது.

கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இசட் குடும்ப வரிசையிலான இசட்1000 சூப்பர் பைக்கை போன்றே இதன் ஸ்பிளிட் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சைலென்சர் குழாய் அமைப்பு மிக பெரிதாகவும், கம்பீரத்தை கூட்டும் விதத்திலும் உள்ளது. இந்த பைக் 239 கிலோ எடை கொண்டது.

கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 4 சிலிண்டர்கள் கொண்ட 998 சிசி எஞ்சின்தான் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சூப்பர்சார்ஜர் துணையுடன் இயங்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 210 எச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

Most Read: விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்

கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

சாதாரண சாலையில் பயன்படுத்தும் சிறப்புகள் கொண்ட மாடலானது மணிக்கு 300 கிமீ வேகம் வரையிலும், பந்தய களங்களில் பயன்படுத்துவதற்கான ஆர் மாடலானது மணிக்கு 400 கிமீ வேகம் வரையிலும் செல்வதற்கான திறனை பெற்றிருக்கும்.

Most Read: 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு

கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் விரைவில் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் மற்றும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 ஆகிய சூப்பர் பைக் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Rashrp/YouTube

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Japanese permium bike maker, Kawasaki has unveiled supercharged street fighter super bike Z H2 at 2020 Tokya Motor show today.
Story first published: Wednesday, October 23, 2019, 14:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X