கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா?

கவாஸாகி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மாடலான இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதமே ஐக்மா 2019 கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா?

புதிய மாசு உமிழ்வு விதி 2020 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதினால் அனைத்து நிறுவனங்களும் தங்களது வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக தயாரித்து வருகின்றன. அந்த வகையில் கவாஸாகி நிறுவனத்தில் இருந்து உருவாக்கப்பட்ட பைக் மாடல் தான் இசட்650 பிஎஸ்6.

கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பைக் தற்சமயம் இந்தியாவில் மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் நிறத்தில் மட்டும் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முந்தைய மாடல் பைக் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.5.69 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் புதிய இசட்650 பைக்கின் விலையானது ரூ.6.25 லட்சத்தில் இருந்து ரூ.6.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா?

இசட் 'சுகோமி' ஸ்டைலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய பைக்கில் எல்இடி ஹெட்லைட்ஸ், 4.3 இன்ச் டிஎஃப்டி கலர் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், ரைடியோலாஜி ஆப்6 மூலம் ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி, டன்லப் ஸ்போர்ட்ஸ்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் டயர்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக எல்இடி ஹெட்லைட்டும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்டேஷன் திரையும் பைக்கிற்கு மிகவும் இளமையான தோற்றத்தை அளிக்கின்றன.

கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா?

இவற்றுடன் எடை குறைவான சேசிஸ் பாகங்கள் மற்றும் சவுகரியமான பயணத்திற்கு பிளவுப்படாத இணைப்பு இருக்கை அமைப்பு போன்றவையும் இந்த பிஎஸ்6 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பாக முன் சக்கரத்தில் 41 மிமீ டெலிஸ்கோப் ஃபோர்க்ஸ் மற்றும் ட்யூல்-பிஸ்டன் காலிபர்ஸை கொண்ட சக்கரத்துடன் சிறிது சுழலக்கூடிய 300மிமீ பெடல் டிஸ்க்கும் பின்சக்கரத்தில் கிடைமட்டமான பேக்-லிங் மோனோஷாக் மற்றும் சிங்கிள்-பிஸ்டன் பெடல் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன.

கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பிஎஸ்6 பைக்கில் 649சிசி லிக்யூடு-கூல்டு இணையான இரட்டை என்ஜின் அமைப்பை கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 68 பிஎச்பி பவரையும் 6,700 ஆர்பிஎம்-ல் 64 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்துகிறது. முன்னதாக இதன் முந்தைய மாடலில் பொருத்தப்பட்டிருந்த பிஎஸ்4 என்ஜின் இதே பிஎச்பி பவரை தான் வழங்கியது. ஆனால் டார்க் திறன் பிஎஸ்6 அப்டேட்டால் 1.7 என்எம் அதிகரித்துள்ளது.

கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா?

அதேபோல் முந்தைய மாடல் 190 கிலோ எடை கொண்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிஎஸ்6 மாடல் பைக் 187 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 15 லிட்டர் கொள்ளவை கொண்டது. மற்றப்படி தரையிலிருந்து இருக்கையின் உயரம் 790மிமீ, க்ரவுண்ட் கிளியரென்ஸ் 130மிமீ போன்றவற்றில் எந்த மாற்றத்தையும் கவாஸாகி நிறுவனம் ஏற்படுத்தவில்லை.

கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது... விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த ஆண்டில் விற்பனையை துவங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த இசட்650 பிஎஸ்6 பைக் தனது பிரிவில் உள்ள சிஎஃப் மோட்டோ 650என்கே, பெனெல்லி டிஎன்டி 600ஐ மற்றும் லியோன்சினோ 500 போன்ற மாடல் பைக்குகளுடன் போட்டியிடவுள்ளது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Z650 BS6 Launch In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X