கேடிஎம் 200 ட்யூக் பிஎஸ்-6 மாடல் அறிமுக விபரம்!

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய கேடிஎம் 200 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கேடிஎம் 200 ட்யூக் பிஎஸ்-6 மாடல் அறிமுக விபரம்!

இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் முதல் பைக் மாடலாக வந்த 200 ட்யூக் பைக்கிற்கு கிடைத்த வரவேற்பு தெரிந்த விஷயம். கடந்த 2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கேடிஎம் 200 ட்யூக் பிஎஸ்-6 மாடல் அறிமுக விபரம்!

புதிய எஞ்சினுடன் கேடிஎம் 200 ட்யூக் பைக் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் அறிமுக விழாவின்போது பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட, 200 ட்யூக் பைக்கின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கேடிஎம் 200 ட்யூக் பிஎஸ்-6 மாடல் அறிமுக விபரம்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்ட கேடிஎம் 200 ட்யூக் பைக் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த பின்னர்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறதாம்.

கேடிஎம் 200 ட்யூக் பிஎஸ்-6 மாடல் அறிமுக விபரம்!

கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் தற்போது 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சினஅ அதிகபட்சமாக 24.5 எச்பி பவரையும், 19.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

MOST READ: சட்டை பட்டன் போடாத கார் டிரைவருக்கு கடும் அபராதம்... எவ்வளவு என தெரிந்தால் இன்னும் ஷாக் ஆயிடுவீங்க

கேடிஎம் 200 ட்யூக் பிஎஸ்-6 மாடல் அறிமுக விபரம்!

கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குலும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் டிஸ்க் பிரேக்குகளும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்படுகின்றன. புதிய மாடலில் சஸ்பென்ஷன் அமைப்பு மேம்படுத்தப்படுவதுடன், அகலமான இருக்கைகளுடன் வர இருக்கிறது.

MOST READ: பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்: ஷெல் பங்க் ஊழியர்களின் அடாவடியால் வாகன ஓட்டி அவதி!

கேடிஎம் 200 ட்யூக் பிஎஸ்-6 மாடல் அறிமுக விபரம்!

தற்போதைய மாடல் ரூ.1.62 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் புதிய மாடலின் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 200 Duke with BS-6 compliant engine model will be launched in India by april, 2020.
Story first published: Thursday, September 26, 2019, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X