கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்!

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் வரிசை பைக்குகளில் ஏபிஎஸ் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், 250 ட்யூக் பைக்கில் ட்யூவல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் புதிய கேடிஎம் 250 ட்யூக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்!

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் வரிசை பைக்குகளில் ஏபிஎஸ் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ட்யூக் வரிசையில் 125சிசி மற்றும் 200 சிசி மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டன. ஆனால், 390 ட்யூக் பைக்கில் டியூவல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்!

இந்த நிலையில், 250 ட்யூக் பைக்கில் ட்யூவல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏபிஎஸ் அல்லாத 250 ட்யூக் பைக் ரூ.1.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.1.94 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்!

ஏபிஎஸ் அல்லாத மாடலைவிட ரூ.13.400 கூடுதல் விலையில் புதிய 250 ட்யூக் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட 250 ட்யூக் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும், இந்த மாத இறுதி வரையிலும் ஏபிஎஸ் அல்லாத மாடலும் விற்பனையில் இருக்கும். வரும் ஏப்ரல் முதல் 125சிசி திறனுக்கும் மேலான மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை தவிர்த்து வேறு பெரிய அளவிலான மாற்றங்கள் இந்த பைக்கில் இல்லை. கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் இந்த 250 ட்யூக் பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்!

ஹாலஜன் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளது. 250 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்பிளிட் சீட் வகையிலான இருக்கை அமைப்பும் இடம்பெற்றுள்ளன.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்!

புதிய கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் 249சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்!

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் WP நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்!

மேலும், இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 300 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இப்போது சேர்ந்து பைக்கின் பாதுகாப்பிற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM India has updated the 250 Duke model with ABS. The KTM 250 Duke ABS variant is priced at Rs 1.94 lakh. This is a hike of Rs 13,400 compared to the non-ABS variant, priced at Rs 1.80 lakh. Both prices are ex-showroom (India).
Story first published: Friday, March 1, 2019, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X