கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது...

790 மாடலின் அட்வென்ஜர் வெர்சன் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த கேடிஎம் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த பைக்கின் அறிமுகம் இந்த ஆண்டு கடைசி கால் பகுதியில் இருக்கும் என்று செய்திகள் வெளிவருகின்றன.

கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது...

கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற இந்திய பைக் வாரத்தில் 390 அட்வென்ஜர் பைக்குடன் பார்வையாளர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் 390 அட்வென்ஜர் பைக் அப்போதே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் 790 அட்வென்ஜரின் அறிமுகம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது...

2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 790 ட்யூக் பைக்கை போன்று 790 அட்வென்ஜர் பைக்கையும் சிகேடி முறையில் தான் கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 790 ட்யூக் பைக் எதிர்கொண்டுவரும் பாகங்களின் அதிகப்படியான தேவையை 790 அட்வென்ஜர் பைக்கும் எதிர்கொள்ளாதவாறு சில திட்டங்களை இந்நிறுவனம் வகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது...

790 அட்வென்ஜர் பைக்கின் டிசைன் குறிப்புகள் அனைத்தும் 1290 அட்வென்ஜர் மாடலில் இருந்து தான் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட சில அம்சங்களை தனக்கென இந்த 790 அட்வென்ஜர் பைக் பெற்றுள்ளது. தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றவாறு அட்வென்ஜர் பைக்குகளில் வழங்கமாக பொருத்தப்படும் விண்ட்ஸ்க்ரீன் மற்றும் அகலமான இருக்கைகளை 790 அட்வென்ஜருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது...

எழுந்து நின்றும் ஓட்டும் வசதி மற்றும் ஹேண்ட் கார்ட்ஸ் போன்றவை ஆப்-ரோடு பயன்பாட்டிற்காக நிலையாக கொடுக்கப்பட்டுள்ளன. 790 அட்வென்ஜர் பைக்கில் 799சிசி இணையான இரட்டை என்ஜின் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதே என்ஜின் அமைப்பு தான் 790 ட்யூக் பைக்கிலும் வழங்கப்பட்டிருந்தாலும் அட்வென்ஜர் வெர்சனுக்காக என்ஜினின் வெளியிடும் ஆற்றல் அளவுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது...

இதனால் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,250 ஆர்பிஎம்-ல் 94 பிஎச்பி பவரையும் 6,600 ஆர்பிஎம்-ல் 88 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷன் பணியை முன்புறத்தில் 43மிமீ அட்ஜெஸ்ட் செய்ய முடியாத அப்சைட்-டவுன் ஃபோர்க்கும் பின்புறத்தில் ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டபிள் மோனோஷாக்கும் கவனிக்கின்றன.

கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது...

எலக்ட்ரானிக் ரைடர் சாதனங்களாக மோட்டார்சைக்கிள் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளன. ரைடர் இந்த 790 அட்வென்ஜர் பைக்கை ஸ்ட்ரீட், ஆப்-ரோட், மழை மற்றும் ராலி என நான்கு ரைடிங் மோட்களில் இயக்க முடியும். இந்த அட்வென்ஜர் பைக்கின் முன் சக்கரம் 21 இன்ச்சிலும் பின் சக்கரம் 18 இன்ச்சிலும் வழங்கப்பட்டுள்ளன. டயர்கள் ஆப்-ரோட்டிற்கும் ஏற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியானது...

790 அட்வென்ஜர் இந்தியாவில் அறிமுகமான பின்பு ட்ரையம்ப் டைகர் 800, பிஎம்டபிள்யூ 850ஜிஎஸ் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டியிடவுள்ளது. இந்த பைக்கின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.10-11 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் 790 அட்வென்ஜர் பைக் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பைக்குகளுள் ஒன்றாக உள்ளது. ஏனெனில் இந்த பைக் தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கேடிஎம் நிறுவனம் 250சிசி, 390சிசி போன்ற பைக்குகளின் அட்வென்ஜர் வெர்சன்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல தொழிற்நுட்ப தேர்வுகளை வழங்கியுள்ளது. இதனால் இந்த 790 அட்வென்ஜர் பைக்கும் பல தொழிற்நுட்ப அம்சங்களுடன் வெளியாகும் என்பது உறுதி.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 790 Adventure India Launch Confirmed For Next Year: To Rival Triumph Tiger 800
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X